முன்னாள் எம்.பி., சசிகலாபுஷ்பா சென்ற கார் மீது தாக்குதல் !

முன்னாள் எம்.பி., சசிகலாபுஷ்பா சென்ற கார் மீது தாக்குதல் !
X

விருதுநகர் அருகே முன்னாள் எம்.பி., சசிகலாபுஷ்பா சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று இரவு சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு காரில் சென்ற முன்னாள் அதிமுக எம்.பி தற்போதைய பாஜக செயற்குழு நிர்வாகியுமான சசிகலாபுஷ்பா தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே செவல்பட்டி பிரிவில் வந்து கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் காரில் இடது பக்க கண்ணாடியை இரும்பு கம்பியால் அடித்துள்ளனர். தொடர்ந்து விரைந்து சென்ற காரை பின்புறமும் அடித்து நொறுக்கி உள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த சசிகலாபுஷ்பா காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காரியாபட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தை விருதுநகர் மாவட்ட எஸ்பி., பெருமாள், துணை கண்காணிப்பாளர் சகாயஜோஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இருசக்கர வாகனத்தில் வந்து தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!