ஸ்டெர்லைட் சம்பவம் விசாரணைக்கு ரஜினிகாந்த் ஆஜராக வாய்ப்பு ! :வழக்கறிஞர் பேட்டி

ஸ்டெர்லைட் சம்பவம் விசாரணைக்கு ரஜினிகாந்த் ஆஜராக வாய்ப்பு ! :வழக்கறிஞர் பேட்டி
X

வரும் ஜனவரி மாதத்தில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் விசாரணைக்காக ஒருநபர் ஆணையத்திற்கு அழைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் தூத்துக்குடியில் பேட்டியின் போது கூறினார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆணையத்தின் சார்பில் அரசு வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இதுவரைநடைபெற்ற 23 கட்ட விசாரணையில் 586 பேர் ஆஜராகி உள்ளதாகவும் அவர்களிடமிருந்து 775 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளது.மேலும் 24ம் கட்ட விசாரணை ஜனவரி மாதம் நடைபெறும் என்ற அவர், அதில் ஜனவரி மாதத்தில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் விசாரணைக்காக ஒருநபர் ஆணையத்திற்கு அழைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே கடந்த பிப்ரவரி 25-ந்தேதி விசாரணைக்காக ஒருநபர் ஆணையத்தில் ஆஜராவதற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அப்போது ரஜினிகாந்த் தரப்பில் அபிடவிட் தாக்கல் செய்ததின் பேரில் அவர் நேரில் ஆஜராவதற்கு விலக்களிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil