உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களின் எதிர்காலம்? அமைச்சர் விளக்கம்

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களின் எதிர்காலம்? அமைச்சர் விளக்கம்
X
உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் மருத்துவ மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க உதவி செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் அறிவித்து 7 நாள் போரில் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அங்கு சிக்கி இருந்த மணவர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு தீவிரம் காட்டி மாணவர்களை மீட்டது. உக்ரைனில் மருத்துவப்படிப்புக்காக சென்ற தமிழக மாணவர்கள் பலரும் மீட்கப்பட்டனர். இதற்கிடையில் மீட்டு வரப்பட்ட மாணவர்களின் நிலை குறித்தும் அவர்கள் படிப்பு குறித்தும் பெரும் கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் மருத்துவ மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க உதவி செய்யப்படும். என்றும் வெளிநாடுகள் சென்று மருத்துவம் படிக்கும் மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்படுகிறது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!