முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின்
X

சென்னை உயர்நீதி மன்றம்.

திருச்சியில் தங்கி காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நகர்புற உள்ளாட்சி தேர்தல் அன்று சென்னையில் திமுக தொண்டர் ஒருவர் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி அவரை முன்னாள் அமைச்சர் தாக்கி அரை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்திருந்தார். இந்த ஜாமின் மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கினார். மேலும் திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள கண்டோமெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!