சைபர் குற்றம் புகார் அளிக்க புதிய எண் அறிவிப்பு

சைபர் குற்றம் புகார் அளிக்க புதிய எண் அறிவிப்பு
X
சைபர் குற்றம் புகார் அளிக்க தமிழக காவல்துறை புதிய எண்ணை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவு படி தமிழக காவல்துறை பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சைபர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் வங்கி மோசடி, இணையதள குற்றங்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சைபர் க்ரைமில் ஏற்கனவே இயங்கி வரும் 155260 என்ற எண்ணிற்கு மாற்றாக 1930 என்ற புதிய சைபர் கிரைம் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எண் மூலம் வங்கி மோசடி குறித்து புகார் அளித்தால் உடனே சைபர் கிரைம் போலீசார் சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு மோசடி நடந்த வங்கி கணக்கை முடக்கி மோசடி நபர்கள் பணம் எடுக்க முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மோசடி நபர்களிடம் இருந்து பொதுமக்களின் பணத்தை பாதுகாக்க எண் 1930 மிகவும் உதவியாக உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!