தங்கம் விலை விர்ர்ர்.... அதிர்ச்சியில் பொதுமக்கள்

தங்கம் விலை விர்ர்ர்.... அதிர்ச்சியில் பொதுமக்கள்
X
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கிடுகிடுவென அதிகரித்து சில நாட்களாக குறைந்து வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.38,504க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ரூ.4,813க்கு விற்பனைகிறது. மேலும் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.5179க்கும் ரூ.41432க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையின் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1.10 உயர்ந்து, ரூ.70.10க்கு விற்பனையாகிறது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்