இன்று தேசிய அறிவியல் தினம்

இன்று தேசிய அறிவியல் தினம்
X

1930ம் ஆண்டில் நோபல் பரிசு பெற்று இந்தியாவிற்கு புகழை தேடித்தந்த சர்.சி.வி.ராமன்.

அறிவியல் அறிஞர்களும் போற்றப்பட வேண்டும் என்பதற்காக 1987ம் ஆண்டு தேசிய அறிவியல் தினம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

தியாகிகளை கொண்டாடுவதுபோல அறிவியல் அறிஞர்களும் போற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 1987ம் ஆண்டு தேசிய அறிவியல் தினம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. சர்.சி.வி.ராமன் அவர்கள் ஒளிச்சிதறல் விதி அதாவது ராமன் விளைவு என்கிற ஆராய்ச்சி முடிவை பிப்ரவரி 28 ம் தேதி(1928) வெளியிட்டார். இதற்காக அவர் 1930ம் ஆண்டில் நோபல் பரிசு பெற்று இந்தியாவிற்கு புகழை தேடித்தந்தார். ராமன் ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ம் தேதி தான் தேசிய அறிவியல் தினமாக அறிவிக்கப்பட்டது. அறிவியலின் சிறப்பை இளம்தலைமுறை மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.

Tags

Next Story
ai healthcare technology