அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது
X
தேர்தலின்போது மறியலில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டுபோட முயன்றதாக திமுக தொண்டர் நரேஷ்(45) என்பவரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து சட்டையை கழற்றி கைகளை கட்டி சாலையில் இழுத்துச்சென்று தண்டையார்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து விசாரித்த போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவிகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணா ஆனந்த் முன் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவரை மார்ச் 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் இவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ள நிலையில், தேர்தல் அன்று சாலை மறியலில் ஈடுபட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!