திமுகவினர் சரளமாக கள்ள ஓட்டை பதிவு செய்தனர்: அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19 அன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. கோவையில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. திமுகவின் இதற்கு முந்தைய அராஜகத்தை எல்லாம் இந்த தேர்தல் விஞ்சி விட்டது. கொரோனா நோயாளிக்கு என்று வரையறுக்கப்பட்ட மாலை நேரம் 5 மணி முதல் 6 மணி வரை கள்ள ஓட்டுக்காக திமுகவால் திட்டமிடப்பட்டிருந்து. இதை அறிந்து, தனி நேரம் தரப்பட வேண்டாம் என தடுத்து பார்த்தோம். ஆனால், எதிர்பார்த்தபடி திமுக குண்டர்கள் சரளமாக கள்ள ஓட்டை பதிவு செய்தனர்'' என்று அண்ணாமலை கூறியிருந்தார்.இந்நிலையில், வாக்குப்பதிவு முறையாக நடக்கவில்லை என்றும், கள்ள ஓட்டுகள் அதிகமாக போடப்பட்டிருக்கிறது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ள ஓட்டு போடப்பட்ட வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என தமிழக பாஜக சார்பாக வழக்குத் தொடரப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu