உலகக்கோப்பை கிரிக்கெட் 2023 : இளம் இரத்தம் பாய்ச்சிய இந்திய அணி தட்டப்போகிறது..?!

உலகக்கோப்பை கிரிக்கெட் 2023 : இளம் இரத்தம் பாய்ச்சிய இந்திய அணி தட்டப்போகிறது..?!
X
2023 உலகக் கோப்பையை கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கொண்டு வருமா..? ரசிகர்களின் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலிக்கு உலகக்கோப்பையை பெறவேண்டிய அந்த மிகப்பெரிய பொறுப்பு அவரது தோளில் சுமத்தப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபோது கோலிக்கு 23 வயது.

2011 கோலி மற்றும் டெண்டுல்கர் இருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான தருணம். ஆமாம் 2011 உலகக் கோப்பை என்பது அவர்கள் மறக்க முடியாதது.அந்த போட்டியில் இந்தியா உலகக்கோப்பையை வென்றது. 1983ம் ஆண்டில் இந்திய அணி உலகக்கோப்பை வென்ற பிறகு, இது 2011ம் ஆண்டு இந்திய அணியின் இரண்டாவது உலகக் கோப்பை வெற்றி அதுவே ஆகும்.

world cup 2023

2011 உலகக்கோப்பை வென்றபோது கோஹ்லிக்கு 23 வயது. டெண்டுல்கர் 38 வயதை எட்டியிருந்தார். அதன்பின்னர், சர்வதேச கிரிக்கெட் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் இரண்டிலும் கோலி ஏமாற்றங்களைச் சந்திக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது. 2019 வரை ஐபிஎல் தொடரில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வென்றதில்லை.

2016 முதல் 2022ம் ஆண்டுகளுக்கு இடையில் அனைத்து வகை கிரிக்கெட் அணியின் இந்திய கேப்டனாக கோலி இருந்த நேரத்தில், அந்த அணி 2018 ஆசிய கோப்பையை மட்டுமே வென்றது. ஆனால், அந்த போட்டியில் கோலி வெளியேறி இருந்தார். ரோஹித் சர்மா தான் அணியின் கேப்டனாக இருந்தார்.

எப்படி டெண்டுல்கர் 2011ம் ஆண்டில் 38 வயதில் உலகக் கோப்பையை எதிர்கொண்டாரோ அதேபோல கோலி இப்போது 34 வயதில் 2023 உலகக் கோப்பைக்குச் செல்கிறார். மேலும் 2019 முதல் 2022ம் ஆண்டு முதல் பாதி வரை அவரது விளையாட்டுத்திறன் ஆபத்தான வடிவில் இருந்தது. அதாவது விளையாட்டு பாஷையில் ஃபார்மில் இல்லை. அந்த ஆபத்தான சரிவில் இருந்து கோலி மெல்ல மெல்ல மீண்டு இப்போது ஒரு சரியான ஃபார்முக்கு வந்துள்ளார்.

2011 உலகக் கோப்பை அணியின் தொடக்க வீரராக இருந்த முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக், டெண்டுல்கர் அந்த போட்டிக்கு சென்றதை தற்போது கோலியின் சூழ்நிலையை ஒப்பிட்டு, ஒரு பொருத்தமான ஒற்றுமையை சுட்டிக்காட்டினார்.

"சச்சின் டெண்டுல்கர் 2011 உலகக் கோப்பையில் விளையாடியது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது, அதுவே அவரது கடைசி உலகக் கோப்பையாக மாறியது. அவர் என்னிடம் ஒருநாள் கூறும்போது, 'உங்களுக்குப் பிறகுதான் நான் ஓய்வு பெறுவேன். அதேபோலவே எனக்குப் பிறகு அவர் ஓய்வு பெற்றார். டெண்டுல்கரின் கடைசி உலகக்கோப்பை என்பதால் அந்த போட்டியை அவருக்காக விளையாடினோம். இதை வென்றால் சச்சினுக்கு அது ஒரு பெரிய கௌரவமான வெளியேற்றமாக இருக்கும் என்று நினைத்து எங்கள் முயற்சியை 100 சதவீதத்தை விட அதிகமாக்கினோம்." என்று இந்த ஆண்டு உலகக் கோப்பைக்கான அட்டவணை மற்றும் இடங்களின் பட்டியலின் அறிவிப்பின் போது சேவாக் கூறினார்.

world cup 2023

"சச்சினை ஒத்தவர் விராட் என்று நான் நினைக்கிறேன். டெண்டுல்கரின் ஆட்டத்தில், பேசும் விதத்தில், மற்றவர்களை ஊக்குவிக்கும் விதத்தில், விளையாடும் திறனில் என்று எல்லா வகையிலும் சச்சினைப்போலவே விராட் இருக்கிறார். ஆகவே, கோலிக்காக இந்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

2003 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பை போட்டிகளில் சச்சின் இளைய வீரர்களான கெளதம் காம்பிர் அல்லது யுவராஜ் சிங் ஆகியோரோடு போட்டிபோட்டு விளையாடி அவர்களைவிட அதிக ரன் எடுத்து அவர்களை தோற்கடிப்பார். கோலியும் அதேபோல ஒன்றைச் செய்ய ஆவலுடன் காத்திருப்பார் என்று நான் நினைக்கிறேன்." என்றார் சேவாக்

world cup 2023

அப்படி கோலியின் தலைமையில் உலகக்கோப்பை 2023 -ஐ கைப்பற்றினால், கடந்த பத்தாண்டு கோலியின் கிரிக்கெட் வரலாற்றில் இது மறக்கமுடியாத சாதனையாக இருக்கும் என்பது மாற்றமில்லை. அக்டோபர் 5ம் தேதி தொடங்கும் போட்டிகள் நவம்பர் 19ம் தேதி வரை நடக்கிறது.

Tags

Next Story
கே.எஸ்.ரங்கசாமி கல்லூரி மாணவர்களின் விளையாட்டுத் துறை சாதனை - பெரியார் பல்கலை போட்டிகளில் இரண்டாம் இடம்