Jake Paul vs Tommy Fury-உலகமே எதிர்பார்க்கும் குத்துச்சண்டை : டாமி ப்யூரி-ஜேக் பால் இன்று நேருக்கு நேர் மோதல்..!

Jake Paul vs Tommy Fury -டாமி ப்யூரி-ஜேக் பால் இன்று நேருக்கு நேர் மோத உள்ள குத்துச் சண்டை.(கோப்பு படம்)
Jake Paul vs Tommy -சில குத்துச்சண்டை ரசிகர்கள் டாமி ப்யூரியுடனான ஜேக் பால் சண்டையின் நியாயத்தன்மையை நிராகரிப்பார்கள் என்ற எண்ணங்கள் இருந்தாலும் கூட , இது 2023ம் ஆண்டின் மிகப்பெரிய குத்துச்சண்டை நிகழ்வுகளில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.
இந்த ஜாம்பவான்கள் மோதும் இந்த போட்டி இரண்டு ரத்துகளுக்குப் பிறகு இனிமேல் இந்த இரண்டு போட்டியாளர்களும் ஒருபோதும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள மாட்டார்கள் என்று தோன்றியது. ஆனால் இப்போது பவுலும் ப்யூரியும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சவுதி அரேபியாவில் மோதலுக்கு தயாரிகிவிட்டனர்.
இருவரின் தோள்களிலும் நிறைய அழுத்தம் புதைந்து கிடக்கின்றன. பவுலைப் பொறுத்தவரை, ஒரு சுறுசுறுப்பான தொழில்முறை குத்துச்சண்டை வீரருக்கான திறன் பெற்றவர் என்பதை நிரூபிக்க உண்மையிலே இது அவருக்கான ஒரு வாய்ப்பு. அதே நேரத்தில் ஃப்யூரி தனது குடும்பத்தையும் WBC உலக ஹெவிவெயிட் சாம்பியனான டைசன் ப்யூரியையும் பெருமைப்படுத்த விரும்புகிறார்.
Jake Paul vs Tommy
டாமி ப்யூரி
ஆகவே இருவருக்கும் இரண்டுவிதமான பொறுப்புகள் தங்கள் மீதி இருப்பதை உணர்ந்து இருக்கிறார்கள். எனவே, சண்டையும் கடுமையாகவே இருக்கும் என்று ரசிகர்கள் காத்து இருக்கின்றனர்.
யார் வெற்றி பெற்றாலும், தனிப்பட்ட ஒருவரின் பெருமைக்கு அப்பாற்பட்டு, எந்த வீரருக்கும் கிடைக்கும் வெற்றியானது, அந்த அமைப்பின் சிறந்த 40 க்ரூசர்வெயிட்களுக்குள் WBC உலகத் தரவரிசையைப் பெற்றுத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Jake Paul vs Tommy
ஜேக் பால்
இந்த குத்துச் சண்டை சவூதி அரேபியாவின் திரியாவில் இன்று இரவு நடைபெறவுள்ளது.
குத்துச்சண்டை வீரர் ஜேக் பால் குறித்த விபரக்குறிப்பு :
குடியுரிமை: அமெரிக்கர்
பிறந்த தேதி: ஜனவரி 17, 1997
உயரம்: 6' 1"
அடைய: 76"
மொத்த சண்டைகள்: 6
பதிவு: 6-0 (4 KOs)
குத்துச்சண்டை வீரர் டாமி ஃபியூரி குறித்த விபரக்குறிப்பு :
குடியுரிமை: பிரிட்டிஷ்
பிறந்த தேதி: மே 7, 1999
உயரம்: 6' 0"
அடைய: N/A
மொத்த சண்டைகள்: 8
பதிவு: 8-0 (4 KOs)
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu