2022 ஐபிஎல் போட்டிகளில் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் வாங்குமா?
அர்ஜுன் டெண்டுல்கர் அவரது தந்தை சச்சின் டெண்டுல்கருடன்.
2022 ஐபிஎல் போட்டிகளில் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் மீண்டும் அடிப்படை விலைக்கு வாங்கி அவரை உற்சாகப்படுத்துவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அர்ஜுன் டெண்டுல்கர் 2021 ஐபிஎல் போட்டிகளில் ஒரு பகுதியாக இருந்தார். அவர் விளையாடினாரோ இல்லையோ அவரை நீச்சல் குளங்களிலும் இன்னும் பல இடங்களிலும் அவரது அணியினருடன் மகிழ்ச்சியாக இருப்பதை காண முடிந்தது. அவர் விளையாடி ரசிகர்களை மகிழ்வித்ததாக தெரியவில்லை.
ஏனென்றால், மும்பை இந்தியன்ஸின் கூற்றுப்படி, அவர் பயிற்சிகளுக்கு பந்துவீச்சாளராகப் பயன்படுத்தப்படுகிறார். மேலும் இது அவரது வாழ்க்கைக்கு உதவக்கூடும். இருப்பினும், உள்நாட்டுப் போட்டிகளில் கூட, அர்ஜுன் டெண்டுல்கர் சிறப்பாக விளையாடி யாரும் பார்த்ததில்லை. அப்படி பார்க்கும்போது அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடிப்பது கடினமே.
அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு பேட்ஸ்மேனாகவோ அல்லது ஒரு பந்து வீச்சாளராகவோ சிறப்பு பெறவில்லை. எனவே, அவர் பயிற்சி பந்துவீச்சாளராக மட்டுமே பயன்படுத்தப்படுவார் என்பது மும்பை இந்தியன்ஸ் அணியினருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழிகாட்டியாக இருக்கும் சச்சின் டெண்டுல்கருக்காக, அர்ஜுன் டெண்டுல்கரை குறைந்தபட்ச அடிப்படை விலைக்கு வாங்க மும்பை இந்தியன்ஸ் கடமைப்பட்டுள்ளது.
அர்ஜுன் டெண்டுல்கரை களத்தில் விளையாட வைப்பார்கள் என்று நாம் வேண்டுமானால் கற்பனை செய்யலாம். ஏனெனில் அவர் ஒரு கொண்டாடப்பட்ட கிரிக்கெட் வீரரின் மகன் அல்லவா? அதற்காக திறமை இல்லாத ஒருவரை தேர்வு செய்து மும்பை இந்தியன்ஸ் தனது 20 லட்சத்தை வீணடிக்க வேண்டுமா என்கிறார்கள், மும்பை இந்தியன்ஸ் அணி நலவிரும்பிகள். திறமையானவர்கள் ஏழ்மை காரணமாக தேர்வுசெய்யப்படாமல் வெளியில் காத்துக்கிடக்கின்றனர். ஆனால், செலிபிரிட்டிகள் பிள்ளைகள் என்பதால் திறமை இல்லாமல் இருந்தும் விளையாடும் வாய்ப்பினை பெற்றுள்ளது விளையாட்டின் சாபம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu