Vilayattu Seithigal-அஸ்வின், ஜடேஜா பந்துகளை எப்டீ அடிப்பீங்க..? : கெவின் பீட்டர்சன்..!
Vilayattu Seithigal
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சில் எப்படி எளிதாக ஃபோர், சிக்ஸர் என அடித்து விலாசலாம் என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் கூறி இருக்கிறார்.
Vilayattu Seithigal
இங்கிலாந்து அணி, இந்திய மண்ணில் ஒரே ஒரு முறை மட்டும் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி இருக்கிறது. அந்த தொடரின் போது இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் கெவின் பீட்டர்சன் பெரிய அளவில் கை கொடுத்தார். குறிப்பாக மும்பையில் நடந்த டெஸ்ட்டில் அவர் 186 ரன்கள் குவித்தார். அந்தப் போட்டியில் அஸ்வின் பந்துவீச்சை அவர் குறி வைத்து ரன் குவித்தார்.
இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரில் ஆட இருக்கும் நிலையில், அஸ்வினை எப்படி எதிர்கொள்வது என்றும், ஜடேஜா பந்துவீச்சில் எப்படி கவனமாக ஆட வேண்டும் என்றும் கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து வீரர்களுக்கு கூறி இருக்கிறார். அஸ்வினின் பந்தில் எப்படி எளிதாக பவுண்டரி அடிப்பது என்ற ரகசியம் ஒன்றையும் உடைத்துக் கூறி இருக்கிறார். "நான் அப்போது அஸ்வினின் தூஸ்ரா வகை பந்துகளை தேர்வு செய்து அடித்தேன்.
Vilayattu Seithigal
அவர் தூஸ்ரா வீசப் போகிறார் என்றால் பந்து வீச ஓடி வரும் முன்பே தூஸ்ரா வீசுவதற்கு ஏற்ற வகையில் தன் கையில் பந்தை பிடித்துக் கொள்வார். அவர் இப்போதும் அப்படித் தான் செய்கிறார் என நினைக்கிறேன். அவர் மற்ற ஆஃப் ஸ்பின்னர்கள் போல ஓடி வரும் போது தூஸ்ரா வீசுவதற்காக பந்தை பிடிப்பதில்லை. அவ்வாறு அவர் அதை செய்ய மாட்டார். அவர் ஓடி வரும் முன்பே பந்தை கை விரல்களில் பிடித்து விடுவார்." என்றார் கெவின் பீட்டர்சன்.
மேலும், "அஸ்வின் பந்து வீசும் போது நான் 100 சதவீதம் உறுதியாக இருப்பேன். நான் அவரை எத்தனை முறை ஆஃப் சைடில் அடித்து இருப்பேன் என்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம். அஸ்வின் தூஸ்ரா வீசப் போகிறார் என்பதை நான் அவர் பந்து வீச தயார் ஆகும் போதே கவனித்து விடுவேன்.
ஏனெனில், அவர் அப்போது லெக் திசையில் பீல்டிங்கை பலமாக நிற்க வைப்பார். பந்து திரும்பும் என்பதால் அப்படி செய்வார். நான் அதைப் பார்த்து கண்டுபிடித்து, ஃபோர் அல்லது சிக்ஸ் அடிக்க வேண்டும் என நினைத்துக் கொள்வேன்" என்று கூறி இருக்கிறார் கெவின் பீட்டர்சன்.
Vilayattu Seithigal
அடுத்து ஜடேஜா பந்துவீச்சு குறித்து பேசிய பீட்டர்சன், அவர் பந்துகள் திரும்பாது. ஆனால் சில சமயம், சறுக்கிக் கொண்டு வரும். அப்போது ஃபிரன்ட் ஃபூட்டில் ஆடாமல் இருந்தாலே போதும் எனக் கூறி இருக்கிறார்.
இந்த தகவல் இங்கிலாந்து வீரர்களுக்கு கைகொடுக்குமா என்பதை நடக்கவுள்ள போட்டிகளில் இருந்து தெரிந்துகொள்வோம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu