டோக்கியோ ஒலிம்பிக்- ஆகஸ்ட் 4 - ஒலிம்பிக்கில் களைகட்டும் இந்தியாவின் ஆட்டம்
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுக் களத்தில் பன்னிரெண்டாவது நாளான ஆகஸ்ட் 4-ஆம் தேதி இந்தியாவுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதற்கு காரணம் பதக்கம் வெல்வதற்கான அல்லது உறுதி செய்வதற்கான இரண்டு போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அதேபோல பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கக்கூடிய இந்திய வீரர்களும் இன்று தகுதி மற்றும் முதல் சுற்று போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
அதன் விவரம்...
கால்ப்- காலை 04:00 - மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே - ரவுண்ட் 1 - அதிதி அசோக் மற்றும் தீக்ஷா.
தடகளம்- காலை 05:35 - ஆடவர் ஈட்டி எறிதல் (குரூப் ஏ) - நீரஜ் சோப்ரா
காலை 07:05 - ஆடவர் ஈட்டி எறிதல் (குரூப் பி) - ஷிவ்பால் சிங்
குத்துச்சண்டை - காலை 11:00 - மகளிர் வெல்டர்வெயிட் - அரையிறுதி - லவ்லினா vs Busenaz Sürmeneli (துருக்கி)
ஹாக்கி - மாலை 03:30 - மகளிர் ஹாக்கி - அரையிறுதி - இந்தியா vs அர்ஜென்டினா.
இது தவிர ஆடவர் ஃப்ரீஸ்டைல் 86 மற்றும் 57 கிலோ என்ற இரண்டு எடை பிரிவுகளிலும், மகளிர் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ எடை பிரிவில் அன்ஷூ மாலிக் பங்கேற்க உள்ளார்.
ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா, அரையிறுதி பாக்சிங்கில் லவ்லினா, மகளிர் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா vs அர்ஜென்டீனா, மல்யுத்தத்தில் அன்ஷூ மாலிக் ஆகியோர் பங்கேற்க உள்ளதே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu