டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: காலிறுதி வாய்ப்பை தக்க வைத்த இந்தியா
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி காலிறுதி வாய்ப்பை இந்தியா தக்க வைத்தது
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தனது கடைசி குரூப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் தொடக்கத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக ஆட்டத்தின் நான்காவது நிமிடத்தில் இந்தியாவின் வந்தனா கடாரியா முதல் கோலை அடித்தார். முதலாவது கால்பாதியின் கடைசி நிமிடத்தில் தென்னாப்பிரிக்க அணி ஒரு கோல் அடித்தது. இதனால் முதல் கால்பாதியின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது கால்பாதியில் ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய இந்திய அணியின் வந்தனா மீண்டும் ஒரு கோல் அடித்து 2-1 என இந்தியாவை மீண்டும் முன்னிலை பெற செய்தார். முதல் கால்பாதியை போல் இரண்டாவது கால்பாதியிலும் கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி தென்னாப்பிரிக்க அணி ஒரு கோல் அடித்து 2-2 என சமன் செய்தது.
மூன்றாவது கால் பாதியிலும் இரு அணிகளும் ஒரு கோல் அடித்தனர். இதனால் மூன்றாவது கால்பாதியின் இறுதியில் இரு அணிகளும் 3-3 என சமமாக இருந்தனர். இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. கடைசி கால்பாதியில் இந்திய அணி தொடக்கத்தில் ஒரு கோல் அடித்து அசத்தியது. அத்துடன் 4-3 என முன்னிலை பெற்றது. இறுதியில் இந்திய அணி 4-3 என்ற கணக்கில் போட்டியை வெற்றி பெற்றது. அத்துடன் காலிறுதி வாய்ப்பையும் தக்க வைத்தது.
3 ஆவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் களமிறங்கியுள்ள இந்திய மகளிர் அணி ஜெர்மனி, பிரிட்டன், அயர்லாந்து, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடம் ஏ குரூப்பில் இடம்பெற்றுள்ளது. முதல் குரூப் போட்டியில் இந்திய மகளிர் அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. அதன் பின்னர் ஜெர்மனி உடன் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
மூன்றாவது போட்டியில் குரூப் போட்டியில் இந்திய அணி நடப்புச் சாம்பியன் பிரிட்டனிடம் 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்து. இதனால் இந்திய அணி 2 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் 4 ஆவது இடத்தில் உள்ளது. குரூப் பிரில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். ஆனால் அயர்லாந்து அணி தன்னுடைய கடைசி போட்டியில் பிரிட்டன் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
அதில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றால் இந்திய அணியுடன் அயர்லாந்து அணி 6 புள்ளிகள் பெற்று சமமாகும். இதனால் அயர்லாந்து அணி நான்காவது அணியாக காலிறுதிக்கு முன்னேறும். ஆகவே அயர்லாந்து அணி இன்றைய போட்டியில் தோல்வி அடையும் பட்சத்தில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறிவிடும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu