வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்
வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 24 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு, 32வது ஒலிம்பிக் போட்டி கோலாகலமாகத் தொடங்கியது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி வாள் வீச்சு போட்டியில் பங்கேற்றார்.
இந்தப் போட்டியில் முதல் சுற்று போட்டியில் சிறப்பாக விளையாடிய பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ஆனால் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்தார். இரண்டாவது சுற்றில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மனோனுடன் மோதியதில், பவானி தேவி 7-15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
இதையடுத்து அவர், I am sorry என ட்வீட் செய்திருந்தார். மேலும் தனக்கு ஊக்கமும் ஆதரவும் அளித்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.
அதற்கு பதிலளித்த பிரதமர், "நீங்கள் மிகச் சிறப்பாக் விளையாடினீர்கள், அது தான் முக்கியம். வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையில் ஒரு அங்கம். உங்கள் திறமையை நினைத்து நாடு பெருமை கொள்கிறது" என பதில் ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியின் ட்வீட்டுக்கு பதிலளித்த தேவி, "போட்டியில் தோல்வியடைந்தாலும் நீங்கள் எனக்கு ஆதரவாக ஊக்கமளிக்கிறீர்கள், இந்த தலைமை பண்பு, எனக்கு மிகவும் ஊக்க்கமளிக்கிறது. மேலும், கடினமாக உழைக்கவும், இந்தியாவுக்காக வரவிருக்கும் போட்டிகளில் வெற்றி பெறவும் எனக்கு உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பவானி தேவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu