Suryakumar yadav blazes against australia in first odi-காத்திருந்து சாதித்த சூர்யகுமார்..!

Suryakumar yadav blazes against australia in first odi-காத்திருந்து சாதித்த சூர்யகுமார்..!
X
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Suryakumar yadav blazes against australia in first odi, Suryakumar Yadav,sweep shot,IND vs AUS 1st ODI

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி பஞ்சாப்பின் மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 276 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52 ரன்களும், இங்லீஸ் 45 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Suryakumar yadav blazes against australia in first odi

இதன்பின் 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் 74 ரன்களும், ருத்துராஜ் கெய்க்வாட் 71 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காமல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல் ராகுல் 58 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 48.4 ஓவரில் இலக்கை இலகுவாக எட்டிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


சூரியகுமார் மீதான விமர்சனம்

டி.20 போட்டிகளில் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்ந்தாலும், ஒருநாள் போட்டிகளில் தடுமாறி வந்ததால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் அரைசதம் அடித்து, இந்திய அணி தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றினார். போட்டி முடிந்த பிறகு பேசிய சூர்யகுமார் யாதவ், பொறுமையாக விளையாட பழகி வருவதாக தெரிவித்துள்ளார்.

Suryakumar yadav blazes against australia in first odi

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் ருதுராஜ் - கில் மற்றும் கே.எல்.ராகுல் - சூர்யகுமார் யாதவ் இடையே அமைந்த அபார கூட்டணியால் அது அணியின் வெற்றிக்கு உதவியது. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் சூர்யகுமார் யாதவ்வின் ஆட்டம் நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருந்தது.

Suryakumar yadav blazes against australia in first odi

ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சராசரி வைத்திருக்கும் சூர்யகுமார் யாதவுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருவது விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. போதாக்குறைக்கு எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் சூர்யகுமார் யாதவ் இருப்பார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் பேசியதும் விமர்சனங்கள் சூர்யாவை நோக்கி பாய ஆரம்பித்தன.

இப்படியான நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கேப்டன் கே.எல் ராகுல் உடன் இணைந்து சூர்யகுமார் யாதவும் பொறுப்புடன் நிதானமாக ஆடினர். இருவரும் இணைந்து 80 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சூர்யகுமார் யாதவ், 49 பந்துகளில் அரைசதம் பதிவு செய்து ஆட்டமிழந்தார்.

அதிலும் குறிப்பாக, ஒரு ஸ்வீப் ஷாட் கூட நேற்றைய போட்டியில் ஆடவில்லை. ஸ்வீப் ஷாட் ஆடுவதில் கில்லாடியான அவர் ஆசிய கோப்பையில் வங்கதேசம் அணியுடனான ஆட்டத்தில் ஸ்வீப் ஷாட் ஆடும்போது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால், அவரை ஸ்வீப் ஷாட் சூர்யா என மீம் கன்டென்ட் ஆக ட்ரோல் செய்திருந்தார்கள். இந்நிலையில், அதற்கு ஆஸி. க்கு எதிரான போட்டியில் விடை கொடுத்துள்ளார்.

இது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், “ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பிடித்ததில் இருந்தே இது போன்ற ஒரு இன்னிங்ஸை விளையாட வேண்டும் என்றே காத்திருந்தேன். கடைசி வரை களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுக்கவே விரும்பினேன்.

ஆனால் இந்த போட்டியில் என்னால் அதை சரியாக செய்ய முடியாமல் போய்விட்டது. இருந்தபோதிலும் போட்டியின் முடிவு நமக்கு சாதகமாக அமைந்ததால் இந்திய அணியின் இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. டி.20 போட்டிகளில் பந்துவீசும் அதே பந்துவீச்சாளர்கள் தான் ஒருநாள் போட்டிகளிலும் பந்துவீசுகிறார்கள்.

இருந்த போதிலும் என்னால் ஏன் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியவில்லை என யோசித்தேன். இதன்பின் தான் ஒருநாள் போட்டிகளில் அவசரப்படாமல் பொறுமையாக விளையாட பழகிக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

முதல் முறையாக இந்த போட்டியில் தான் நான் ஸ்வீப் ஷாட்கள் அடிக்கவே இல்லை. துவக்க வீரர்கள் மிக சிறப்பாக விளையாடினர். இதே போன்று சிறப்பாக விளையாடி இந்திய அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!