JKKN மருந்தியல் கல்லூரியில் மாநில அளவிலான விளையாட்டு போட்டி: JKKN கல்லூரி அசத்தல்..!

JKKN மருந்தியல் கல்லூரியில் மாநில அளவிலான விளையாட்டு போட்டி: JKKN  கல்லூரி அசத்தல்..!
X

 state level sports meet-மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய இயக்குனர் ஓம் சரவணா.  

state level sports meet- குமாரபாளையம் JKKN மருந்தியல் கல்லூரியில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

state level sports meet-குமாரபாளையம் JKKN மருந்தியல் கல்லூரியில் மருந்தியல் கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


இந்த போட்டியினை கல்வி நிறுவன தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா முன்னிலை வகித்தார். மருந்தியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர். ஆனந்த தங்கதுரை வரவேற்றார். கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர்.சண்முகசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார்.

மருந்தியல் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், கைப்பந்து, கூடைப்பந்து, த்ரோபால் (எறிபந்து) போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் உள்ள 24 மருந்தியல் கல்லூரிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

வாலிபால்

state level sports meet-வாலிபால் போட்டியில் மொத்தம் 23 மருந்தியல் கல்லூரிகள் பங்கேற்றன. இதில் ஸ்ரீ சண்முகா மருந்தியல் கல்லூரி, பண்ணை மருந்தியல் கல்லூரி, jkkn மருந்தியல் கல்லூரி, கே.எம்.சி.எச் மருந்தியல் கல்லூரி ஆகியவை அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.

இறுதிப் போட்டியில் பண்ணை மருந்தியல் கல்லூரியும், JKKN மருந்தியல் கல்லூரியும் மோதின. இதில் 25-10 என்ற புள்ளிகள் கணக்கில் JKKN மருந்தியல் கல்லூரி வெற்றி பெற்றது.


கூடைப்பந்து/ஆண்கள் பிரிவு

ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் மொத்தம் 10 மருந்தியல் கல்லூரிகள் பங்கேற்றன. JKKN மருந்தியல் கல்லூரி, ஈரோடு மருந்தியல் கல்லூரி, விநாயகா மிஷன்ஸ் மருந்தியல் கல்லூரி, கற்பகம் மருந்தியல் கல்லூரி. ஆகியவை அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

இறுதிப் போட்டியில் விநாயகா மிஷன்ஸ் மருந்தியல் கல்லுாரியும், கற்பகம் மருந்தியல் கல்லூரியும் மோதின இதில் 16-12 என்ற புள்ளிகள் கணக்கில் கற்பகம் மருந்தியல் கல்லூரி வெற்றிப் பெற்றது.



கூடைப்பந்து/பெண்கள் பிரிவு

பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் ஈரோடு மருந்தியல் கல்லூரி, JKKN மருந்தியல் கல்லூரி மற்றும் செங்குந்தர் மருந்தியல் கல்லூரி ஆகியவை பங்கேற்றன. லீக் விதிமுறைப்படி போட்டி நடத்தப்பட்டது.

இறுதிப் போட்டியில் ஈரோடு மருந்தியல் கல்லுாரியும், JKKN மருந்தியல் கல்லூரியும் மோதின இதில் 10-3 என்ற புள்ளிகள் கணக்கில் JKKN மருந்தியல் கல்லூரி வெற்றி பெற்றது.


த்ரோபால் (எறிபந்து)

பெண்களுக்கான த்ரோபால் (எறிபந்து) போட்டியில் மொத்தம் 12 மருந்தியல் கல்லூரிகள் பங்கேற்றன. ஈரோடு மருந்தியல் கல்லூரி, JKKN மருந்தியல் கல்லூரி, நந்தா மருந்தியல் கல்லூரி, வேளாளர் மருந்தியல் கல்லூரி ஆகிய கல்லூரிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

ஈரோடு மருந்தியல் கல்லுாரி, மற்றும் JKKN மருந்தியல் கல்லூரி ஆகியவை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில் 15-06 என்ற புள்ளிகள் கணக்கில் JKKN மருந்தியல் கல்லூரி வெற்றி பெற்றது.

பரிசளிப்பு விழா

state level sports meet-வெற்றி பெற்றவர்களுக்கு JKKN கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா பாராட்டி பரிசுகளை வழங்கினார். இந்த கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை JKKN மருந்தியல் கல்லூரியின் இணைப் பேராசிரியர் கனகசபை, உதவிப் பேராசிரியர் டாக்டர். தரணி ஸ்ரீனிவாசன், மற்றும் உடற்கல்வி இயக்குனர் சதீஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி