வாடிப்பட்டியில், மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி..!

வாடிப்பட்டியில், மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி..!
X

வாடிப்பட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பரிசு பெற்றோர்.

மதுரை அருகே வாடிப்பட்டியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. மேலமங்கலம் அணி முதல் பரிசு பெற்றது.

வாடிப்பட்டியில் மாநில கிரிக்கெட் போட்டியில்,மேலமங்கலம் அணி சாம்பியன் பெற்றது:

வாடிப்பட்டி :

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பிரண்ட்ஸ்பார் எவர் கிரிக்கெட்கிளப் மற்றும் எல்.ஜி.காய்ஸ் இணைந்து நடத்திய இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட்போட்டி தாய்பள்ளி மைதானத்தில் நடந்தது.

இந்த விளையாட்டு போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு அ.தி.மு.க.பேரூர் செயலாளர் கவுன்சிலர் டாக்டர்.அசோக்குமார் தலைமை தாங்கி, பரிசுகள் வழங்கினார். ஊராட்சி மன்றத்தலைவர் பவுன்முருகன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி வட்டாரத்தலைவர் பாலசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிரிகெட்கிளப்செயலாளர் எல்.பிரகாஷ் வரவேற்றார்.

இந்த போட்டியில், முதல்பரிசு மேலமங்கலம் ஸ்பார்டன்கிரிக்கெட்கிளப் அணிக்கு டாக்டர்.அசோக்குமார் சார்பாக ரொக்கப்பணம் ரூ.30 ஆயிரமும், எம்.எஸ்.எம்.ஸ்போர்ட்ஸ்கிளப் சார்பாக, கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு பிரண்ட்ஸ் பார்எவர் கிரிக்கெட் கிளப் பிற்கு, பவுன்முருகன் சார்பாக ரொக்கப் பணம் ரூ.20ஆயிரமும் கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசு வாடிப்பட்டி கேடிசிசிஅணிக்கு தனலெட்சுமி சார்பாக ரொக்கப்பணம் ரூ.10ஆயிரம், கோப்பையும் வழங்கப்பட்டது. நான்காம் பரிசு விருவீடு வசந்த் கிரிக்கெட்கிளப்பிற்கு ஆசிரியர் ஜெயக்குமார் சார்பாக ரொக்கப்பணம் ரூ.5ஆயிரமும் கோப்பையும் வழங்கப்பட்டது.


தொடர் ஆட்டநாயகன் விருதினை சரவணன், வெங்கடேஷ் ஆகியோர் பெற்றனர். சிறப்பு பரிசு பிரண்ட்ஸ்பார் எவர்கிளப்பிற்கு கவுன்சிலர் கீதாசரவணன் சார்பாக ரொக்கபணம் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. முடிவில், கிரிகெட் கிளப்தலைவர் சுபாஸ் நன்றிகூறினார்.

விளையாட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருவது பாராட்டுக்குரியது. கிராமங்களில் நடக்கும் போட்டிகளின் அடிப்படையில் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யலாம். மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் இருந்து மாநில அளவிலான போட்டிகளுக்கு வீரர்களை தெரிவு செய்யலாம். மாநில அளவிலான போட்டிகளில் இருந்து திறமையான வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படலாம்.

அதனால் இளைஞர்கள் கிரிக்கெட் போட்டிகள் என்று மட்டுமல்ல கால்பந்து, கைப்பந்து, கபாடி என பல்வேறு போட்டிகளில் தனித்த்திறன் பெற்று விளங்கினால் உயர்ந்த இடத்தைப்பிடிக்கலாம். தற்போது மத்திய, மாநில அரசுகள் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி வருவது சிறப்புக்குரியது. அவர்களுக்கு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

Tags

Next Story
ai solutions for small business