சினிமாவை மிஞ்சும் நிஜக்கதை..! நாங்களும் அடிச்சி ஆடுவோம்ல..!
ப்ரீத்தி ஜிந்தாவுடன் சஷாங்க் (கோப்பு படம்)
இவரது வயது 31. பல ஆண்டுகளாக ஐபிஎல் விளையாடும் கனவுடன் ஏலத்தில் பங்கேற்கிறார். ஆனால், எவரும் எடுத்த பாடில்லை.
இந்த முறை ஏலத்தில் இளம் வயதுடைய வேறு ஒரு சஷாங்கை ஏலத்தில் எடுக்க ப்ரீத்தி தலைமையிலான பஞ்சாப் அணி முடிவு செய்து வைத்திருந்தது. நமது சீனியர் சஷாங்க்கின் பெயர் ஏலத்திற்கு வந்த போது ஜூனியர் சஷாங்க் என்று நினைத்து ப்ரீத்தி கையை தூக்கி விட்டார்.
வேறு யாருமே ஏலம் கேட்கவில்லை. பிறகுதான் இவர் தவறான நபர் என்பதை பஞ்சாப் நிர்வாகம் உணர்ந்தது. இவரை நாங்கள் தேர்வு செய்யவில்லை என்று மற்றவர்கள் சொன்ன போதும், பரவாயில்லை என்று பெரிய மனதுடன் அணியில் சேர்த்துக் கொண்டார் ப்ரீத்தி. இவருடைய ஏலத் தொகை வெறும் ₹20 லட்சம் மட்டுமே.
ஆனால், இந்த வாய்ப்பினை சஷாங்க் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இதுவரை பஞ்சாப் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கலக்கி வருகிறார். பஞ்சாப் கிரிக்கெட் அணியில் இப்போது சஷாங்க் தான் முதலிடத்தில் இருக்கிறார். குறிப்பாக கடந்த போட்டியில் 21 பந்துகளுக்கு 69 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். இதனை கண்டு ப்ரீத்தியே மிரண்டு போனார்.
ஏலத்தின் போது ப்ரீத்தி வேண்டாம் என்று சொல்லியிருந்தால் சஷாங்கின் வாழ்க்கை அங்கேயே முடிந்திருக்கும். ஆனால், அந்த ஒரு கண நேர முடிவு, சஷாங்கின் வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது. அதற்கேற்ப திறமையை சஷாங்க் நிரூபித்தும் வருகிறார். வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டதற்காக வாழ்த்துகள் சஷாங்க் சிங்... பெருந்தன்மைக்காக ப்ரீத்திக்கும் வாழ்த்துகள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu