காஷ்மீர் வீதியில் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டெண்டுல்கர்!
காஷ்மீர் வீதியில் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டெண்டுல்கர்.
ஒரு காலத்தில் தீவிரவாதிகளின் முக்கிய குறியாக இருந்தவர் சச்சன்டெண்டுல்கர். தீவிரவாதிகளால் அவர் எந்த நேரமும் கடத்தப்படலாம் என்ற அச்சம் இருந்து கொண்டு தான் இருந்தது. இதனால் அரசு இவருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கியது.
ஆம், 1990களில் அந்த அச்சுறுத்தல் டெண்டுல்கருக்கு இருந்தது. உளவுதுறை எச்சரித்தது. காந்தஹார் விமான கடத்தல் முந்தி கொண்டதால் டெண்டுல்கர் பின்னால் தள்ளப்பட்டார்.
சச்சினை கடத்தும் முயற்சிக்கு நோட்டம் நடந்ததாக கூட செய்திகள் வந்தன. அவரை கடத்தி வைத்து கொண்டால் நினைத்ததை சாதிக்கலாம் என்பது எதிரிகளின் திட்டமாக இருந்தது. அன்று டெண்டுல்கர் ரகசிய காவலில் தான் இருந்தார். சச்சின் மட்டுமல்ல. இன்னும் பல இந்திய வி.ஐ.பி.,க்கள் அப்படி இருந்தார்கள்.
அப்படியான கொடுங்காலம் மாறி, அதே காஷ்மீர் தெருவில் இன்று டெண்டுல்கர் ஒரு காவலும் இன்றி சிறுவர்களோடு கிரிக்கெட் ஆடுகின்றார். இந்த வீடியோ இந்தியா முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பனிச்சறுக்கி விளையாடியது அனைவருக்கும் தெரியும். ராகுலும், பிரியங்காவும் தங்களது குழந்தை பருவத்தில்கூட இந்த அளவு மகிழ்ச்சியாக இருந்திருப்பார்களா என்பது தெரியாது. அந்த அளவு காஷ்மீர் பனியிலும், வீதிகளிலும் மிகவும் சர்வ சுதந்திரமாக விளையாடி வலம் வந்தனர்.
அந்த அளவு அங்கு தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வளவுக்கு வலுவான இந்தியாவினை மோடி கட்டி எழுப்பியிருக்கின்றார். இப்படிப்பட்ட மோடியை ஆதரிப்பதில் என்ன தவறு? மோடியின் சிறப்பான நிர்வாகம் தானே இந்த அளவு இந்தியா வலிமையாக காரணம். மோடிக்கு மீண்டும் வாய்ப்பு தந்தால் இந்தியா இன்னும் பல மடங்கு வலுவாகும். பொருளாதாரமும் உயரும் என சச்சின் விளையாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பா.ஜ.,வின் ஐ.டி., விங் பெரிய அளவில் வைரலாக்கி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu