ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்தியாவுக்கு வெள்ளி

ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்தியாவுக்கு வெள்ளி
X

வெள்ளிப்பதக்கம் வென்ற ரவிக்குமார் தாஹியா

ஒலிம்பிக் மல்யுத்த ஆடவர் போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா வெள்ளி வென்றார். இது ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஐந்தாவது பதக்கம்

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகளில் ஆண்கள் 'பிரீஸ்டைல்' 57 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா ரஷ்யாவின் ஜாவுர் உகுவேவை எதிர்கொண்டார்.

மொத்தம் 6 நிமிட போட்டி, தலா 3 நிமிடம் கொண்ட இரு 'பீரியடு' ஆக நடத்தப்பட்டது. ஜாவுர், முதல் 'பீரியடில்' 2 புள்ளியை பெற்றார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இவர் 4-2 என முந்தினார். இரண்டாவது 'பீரியடில்' தாஹியா ஆதிக்கம் செலுத்துவார் என நம்பப்பட்டது. மாறாக தாஹியா பிடியில் இருந்து எளிதாக நழுவினார் ஜாவுர்.

4-7 என பின்தங்கிய தாஹியா கடைசி வரை மீள முடியாமல் 4-7 என தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!