ராகுல் டிராவிட்டை புகழ்கிறார் ஆனந்த் மஹிந்திரா..!

ராகுல் டிராவிட்டை புகழ்கிறார்  ஆனந்த் மஹிந்திரா..!
X

ராகுல் டிராவிட், ஆனந்த் மஹிந்திரா (கோப்பு படம்)

இதனால் தான் உங்களை வழிகாட்டி என்கிறோம் என ராகுல் டிராவிட்டை புகழ்ந்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.

டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து, அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு அறிவிக்கப்பட்ட கூடுதல் பரிசுத் தொகையை வேண்டாம் என்று மறுத்து விட்டார். இந்நிலையில், இதனால் தான் உங்களை வழிகாட்டி என்கிறோம் என்று தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா புகழாரம் சூட்டியிருக்கிறார்.

ஐசிசியின் 9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கும், தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டுக்கும் ஆனந்த் மஹிந்திரா தனது பாராட்டுகளை தன்னுடைய எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதாவது, ஐசிசியின் 9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியிருந்த நிலையில், இந்திய அணிக்கு ஐசிசி ரூ.21 கோடி பரிசுத் தொகை வழங்கியிருந்தது.

பிசிசிஐ ஒட்டு மொத்தமாக ரூ.125 கோடி ரொக்கப் பரிசு அறிவித்திருந்தது. மகாராஷ்டிர அரசும் ரூ.11 கோடி ரொக்கப் பரிசு அறிவித்திருந்தது. இந்த தொகை வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டது. அப்போது தலைமைப்பொறுப்பு வகித்த ராகுல் டிராவிட்டுக்கு சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டது.

பல கோடி கிடைத்த சிறப்பு பரிசை ராகுல்டிராவிட் வேண்டாம் என மறுத்து, பிற வீரர்களை போன்றே தமக்கும் கிடைத்தால் போதும் என கூறி விட்டார். இதனை பாராட்டி தான் ஆனந்த் மகிந்திரா இந்த பதிவினை வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்