"விளையாட்டில் அரசியல் வேண்டாம்..!" உலக கோப்பைக்கு இந்தியா வரும் பாக். அணி..!

விளையாட்டில் அரசியல் வேண்டாம்..! உலக கோப்பைக்கு இந்தியா வரும் பாக். அணி..!
X
2023 ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குச் செல்லும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

Pakistan Cricket Team Confirms Visiting India in Tamil, Pakistan Cricket Team Confirms Visiting India, Pakistan Cricket Team Confirms Visiting India for ICC World Cup 2023, ICC World Cup 2023, Cricket

2023ம் ஆண்டுக்கான ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குச் செல்லும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது பலரின் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆசிய கோப்பை 2023-க்கு பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய மாட்டோம் என்று இந்தியா உறுதியாக் தெரிவித்ததை அடுத்து, உலகக் கோப்பையில் இருந்து வெளியேறுவதாக மிரட்டிய பாகிஸ்தான் தற்போது இந்த முடிவுக்கு வந்துள்ளது. பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பில், விளையாட்டை அரசியலுடன் கலக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளது.

“விளையாட்டை அரசியலுடன் கலக்கக் கூடாது என்று பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதனால் வரவிருக்கும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இல் பங்கேற்க தனது கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான் மீது உறுதியற்ற அணுகுமுறியைக்கொண்டிருந்தாலும் கூட தற்போது நாங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவு பாகிஸ்தானின் ஆக்கப்பூர்வமான மற்றும் பொறுப்பான அணுகுமுறையையையும் சர்வதேச விளையாட்டுக் கடமைகளை நிறைவேற்றுவதில் அரசியல் தடையாக இருக்கக்கூடாது என்பதை நம்புவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் நிலை சர்வதேச விளையாட்டு தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவதில் தடையாக இருந்துவிடக்கூடாது என்று பாகிஸ்தான் நம்புகிறது. அதேவேளையில் ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதிலும் இந்தியாவின் ஆக்கபூர்வமான மற்றும் பொறுப்பான அணுகுமுறையைக் காட்டும் என்றும் நம்புகிறோம்.

பாகிஸ்தான் அணியின் பாதுகாப்பு குறித்து கவலை

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம், இந்தியாவுக்கு வரும் தனது கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதாகவும், அதை ஐசிசி மற்றும் இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாகவும் கூறியுள்ளது.

பாகிஸ்தான் தனது கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. இந்த கவலைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்து வருகிறோம். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்தியப் பயணத்தின் போது அவர்களை முழுமையாக பாதுகாப்புடன் கவனிக்க உறுதி செய்யப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரசிகர்களின் உயர் மின்னழுத்தத்தை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக் கோப்பை போட்டி அக்டோபர் 14 ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil