ஒலிம்பிக் பெண்கள் 200 மீட்டர் ஓட்டம்-இந்தியாவின் டூட்டி சந்த் நூலிழையில் தோல்வி

ஒலிம்பிக் பெண்கள் 200 மீட்டர் ஓட்டம்-இந்தியாவின் டூட்டி சந்த் நூலிழையில் தோல்வி
X

இந்திய வீராங்கனை டூட்டி சந்த்

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் கடைசி இடத்தைப் பிடித்து தோல்வியை தழுவி வெளியேறி உள்ளார்

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இன்று பெண்கள் 200 மீட்டர் ஓட்டம் தகுதி சுற்று 1 நடைபெற்றது. மகளிர் 200 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் கடைசி இடத்தைப் பிடித்து தோல்வியை தழுவி வெளியேறி உள்ளார்.

ஒலிம்பிக் 2020 தொடரில் இன்று பெண்கள் 200 மீட்டர் ஓட்டம் தகுதி சுற்று 1 நடைபெற்றது. முன்னதாக 100 மீ ஓட்டத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் தோல்வி அடைந்தார். தகுதி சுற்று போட்டியிலேயே இவர் தோல்வி அடைந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் ஏமாற்றம் அளித்தார்.


இந்நிலையில் இன்று 200 மீ ஓட்டத்தில் இந்தியா சார்பாக அவர் கலந்து கொண்டார். இன்று நடக்கும் போட்டிகள் பல்வேறு குழுக்களாக பிரித்து நடத்தப்பட்டது. இதில் டூட்டி சந்த் நான்காவது குழுவில் தகுதி சுற்றில் கலந்து கொண்டார். இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் ஒவ்வொரு குழுவிலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இன்று ஓட்டப்பந்தயத்தில் நன்றாக தொடக்கம் கொடுத்த டூட்டி சந்த் போக போக வேகம் குறைந்தார். முதலில் இரண்டாம் இடம் இருந்தவர் 100 மீ முடிவில் 4 ம் இடத்திற்கு பின் தங்கினார்.

அதன்பின் கடைசி வரை முன்னேற முடியாமல் திணறியவர் 200மீ ஓட்டத்தை 4 ம் இடத்தில் முடித்தார். இதனால் ஒலிம்பிக் பெண்கள் 200மீ ஓட்டத்தில் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் இந்தியாவின் டூட்டி சந்த் தகுதி சுற்றில் தோல்வி அடைந்து நான்காவது இடம் பிடித்து டூட்டி சந்த் வெளியேறினார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா