மோகனூரில் தேசிய அளவில் குத்துச்சண்டை: 5 மாநில வீரர்கள் பங்கேற்பு

மோகனூரில் தேசிய அளவில் குத்துச்சண்டை: 5 மாநில வீரர்கள் பங்கேற்பு
X

மோகனூரில் நடைபெற்ற  தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட வீரர்கள். 

மோகனூரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில், தமிழகம், கேரளா உள்பட 5 மாநில வீரர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில், சாய் பாக்சிங் அகாடமி சார்பில், தேசிய அளவிலான தொழில் முறை குத்துசண்டை போட்டி நடைபெற்றது. மோகனூர் முன்னாள் டவுன் பஞ்சாயத்து உடையவர் தலைமை வகித்தார். டவுன் பஞ்சாயத்து தலைவர் வனிதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோகனூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் நவலடி, டாக்டர் ஷ்யாம்சுந்தர் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.

இப்போட்டியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 11 பிரிவுகளில், 4 சுற்றுகளாக நடைபெற்றது. இந்தியன் பாக்சிங் கவுன்சில் சூப்பர்வைசர் கேவிநாக்பூர்வாலா தலைமையில், நடுவர்கள் முன்னின்று, போட்டிகளை நடத்தினர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழகத்தில், மூன்றாம் முறையாக, மோகனூரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துசண்டை போட்டியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, சாய் பாக்சிங் அகாடமி நிறுவனர் திலக், ஹரிஹரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
ai automation in agriculture