'தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் திமிர் பிடித்தவர்கள்' : கபில்தேவ் காட்டம்..! ஜடேஜா கூல் பதில்..!

தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் திமிர் பிடித்தவர்கள் : கபில்தேவ் காட்டம்..! ஜடேஜா கூல் பதில்..!
X

Ravindra Jadeja-இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா.

தற்போதைய இந்திய வீரர்கள் திமிர்பிடித்தவர்கள் என்று கபில்தேவின் கூற்றுக்கு ரவீந்திர ஜடேஜா பதில் கூறியுள்ளார்.

Kapil Dev says current Indian players are being arrogant in tamil, Kapil Dev says current Indian players are being arrogant, Former Indian Cricket Captain Kapil Dev, All Rounder Ravindra Jadeja, Sachin Tendulkar, VVS.Laxman, Ragul Dravid, Rohit Sharma, Virat Kohli

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் இன்று (ஆகஸ்ட் 01) நடைபெறுகிறது.

தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ள நிலையில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி

இறுதி ஒருநாள் போட்டிக்கு தயாராகி வருகின்றனர். அதற்கு முன்னதாக, முன்னாள் இந்திய கேப்டன் கபில் தற்போதைய இந்திய வீரர்கள் 'திமிர்பிடித்தவர்கள்' என்றும், அவர்களுக்கு பெரியத்தொகையுள்ள சம்பள காசோலைகள் வழங்கபப்டுவதால் அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணுகிறார்கள் என்று கபில் தேவ் ஒரு கருத்தை தெரிவித்தார்.


தி வீக்' இதழுக்கு அளித்த நேர்காணலில், கபில் தனது முன்னாள் சக வீரர் சுனில் கவாஸ்கரின் பழைய அறிக்கையை மேற்கோள்காட்டி பதிலளித்தார். அங்கு சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்ஷ்மண், ராகுல் டிராவிட்போன்ற பழைய சூப்பர் ஸ்டார்களைப் போலல்லாமல், தற்போதைய இந்திய வீரர்கள் கடினமான சூழலுக்குச் சென்றாலும், அவர்களை ஒருபோதும் உதவிக்கு அழைப்பதில்லை என்பதை லிட்டில் மாஸ்டர் சச்சின் வெளிப்படுத்தினார்.

இதற்கு கபில் கருத்து தெரிவிக்கையில், "சில நேரங்களில், அதிக பணம் வரும்போது, ஆணவமும் கூடவே வரும். இந்த கிரிக்கெட் வீரர்கள், தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள். அதுதான் வித்தியாசம். பல கிரிக்கெட் வீரர்களுக்கு நிச்சயமாக உதவிகள் தேவைப்படுகின்றன என்று நான் நிச்சயமாக கூறுவேன்.

சுனில் கவாஸ்கர் அங்கு இருக்கும்போது, ஏன் உங்களால் பேச முடியாதா? குறைபாடுகளை அவருடன் பகிர்ந்துகொள்ளக்கூடாதா..? ஏன் ஈகோவாக இருக்க வேண்டும்? ஒருவேளை அவர்கள் தாங்கள் நல்லவர்கள் என்று நினைக்கிறார்கள் போலும். அவர்களுக்கு அது போதும் என்று எண்ணலாம். ஆனால் 50 சீசன் கிரிக்கெட் போட்டிகளை சந்தித்த; பார்த்த ஒருவருக்கு கூடுதலாக எந்தப்பக்கம் சூரியன் வரும், எந்தப்பக்கம் புல் முளைக்கும் என்ற ஞானம் இருப்பதால் உதவி யாருக்குத் தேவை என்பதையும் வலிக்காமல் புரிந்துகொள்ள வைக்கவும் முடியும்.


'இது போன்ற கேள்விகள் எப்பொழுது எழுகின்றன...'?

தற்போது, இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இதுபோன்ற அனைத்து கூற்றுகளுக்கும் பதிலளித்துள்ளார். விண்டீஸ் அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜடேஜா கூறும்போது,

"அவர் இதை எப்போது சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் சமூக வலைதளங்களில் அதிகம் எதையும் தேடுவதில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் சொந்த கருத்து உள்ளது. அனைவரும் அவர்களது விளையாட்டை ரசித்து, கடினமாக உழைக்கிறார்கள். வீரர்கள் அணியில் இடம் பிடிக்கவில்லை என்று உழைக்காமல் இருப்பதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், 100 சதவீதம் விளையாட்டின் மீது உழைப்பைக் கொடுத்து இந்தியாவுக்காக விளையாடி வெற்றி பெற முயற்சிக்கின்றனர்.

"இந்தியா ஒரு ஆட்டத்தில் தோல்வியடையும் போது இதுபோன்ற கேள்விகள் எழுகின்றன. யாரும் திமிர் பிடித்தவர்கள் இல்லை. அனைத்து வீரர்களும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். நாங்கள் கடுமையாக உழைத்து நாட்டிற்காக விளையாடுகிறோம். தனிப்பட்ட கருத்துக்கு இங்கு இடம் இல்லை." என்று ஜடேஜா மேலும் கூறினார்.

ODI தொடரின் தொடக்க ஆட்டக்காரரைப் பற்றி பேசுகையில், ரோஹித் தலைமையிலான இந்தியா 115 ரன்களை இலக்காகக் கொண்டு ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்த ODI இல் ரோஹித் மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, 181 ரன்களுக்கு ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தத் தொடரில் இந்திய அணி வெற்றிபெற உள்ளது. மேலும் வரவிருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்காத ஒரு அணிக்கு தொடரை விட்டுக்கொடுக்காமல் இருக்க நிச்சயம் இந்தியா துடிப்பாக செயல்படும்" என்றார்.

Tags

Next Story