ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி:JKKN கல்வி நிறுவன இயக்குநர் பதக்கம் வழங்கல்

ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி:JKKN கல்வி நிறுவன இயக்குநர் பதக்கம் வழங்கல்
X

வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு JKKN கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஓம்சரவணா, தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்க பொதுச்செயலாளர் எம்.லோகநாதன் ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

ஜேகேகேஎன் கல்வி நிறுவன வளாகத்தில் நடந்த ஆண்கள், பெண்களுக்கான ஜூனியர் மல்யுத்தப்போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவன வளாகத்தில், தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின், மாநில அளவிலான, 8வது ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் மார்ச் 12ம் தேதி சனிக்கிழமை முதல் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து இரண் டுநாட்கள் நடைபெற்றன.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை JKKN கல்வி நிறுவனங்களும், நாமக்கல் மாவட்ட மல்யுத்த சங்கமும் இணைந்து செய்திருந்தன. இந்தப் போட்டிகளில், தமிழ்நாட்டின் 26 மாவட்டங்களை சேர்ந்த 328 மல்யுத்தவீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், 12-03-2022ஆம் தேதி சனிக்கிழமை துவக்கநாள் போட்டிகளை, JKKN கல்வி நிறுவனங்களின் இயக்குநர் செ.ஓம்சரவணா தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

மேலும், இப்போட்டிகள் அகில இந்திய மல்யுத்த சம்மேளன செயற்குழு உறுப்பினரும்,தமிழ்நாடு மல்யுத்த சங்க பொதுச்செயலாளருமான எம். லோகநாதன் முன்னிலையில் நடைப்பெற்றன. 'கிரிகோரோமன்' ஸ்டைல் 55 கிலோஎடைப் பிரிவில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிவிஸ்வா தங்கப் பதக்கமும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டி.நேதாஜி வெள்ளி பதக்கமும் வென்றனர்.

ஃப்ரீஸ்டைல் 57 கிலோ எடைப் பிரிவில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலவிஷால் தங்கப்பதக்கமும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.சங்கர் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.60 கிலோஎடைப் பிரிவில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.விஜயகுமார் தங்கப்பதக்கமும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். சுரேஷ்குமார் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

70 கிலோ எடைப்பிரிவில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பி.ஸ்ரீ. அழகுராம் தங்கப்பதக்கமும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சி.எம். ரிஷிவர்மா வெள்ளிப்பதக்கமும் வென்றனர். 175 கிலோ எடைப்பிரிவில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.ஜே.பிரசன்னா தங்கப் பதக்கமும்,ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கே.பரத் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

ஃப்ரீஸ்டைல் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை நாமக்கல் மாவட்டமும், இரண்டாம் இடத்தை சேலம் மாவட்டமும் வென்றன. 'கிரிகோரோமன் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை சேலம் மாவட்டமும்,கடலூர் மாவட்டம் இரண்டாம் இடமும் வென்றன.

பெண்கள் எடைப் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை சேலம் மாவட்டமும், நாமக்கல் மாவட்டம் இரண்டாம் இடத்தையும் வென்றன. இப்போட்டியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சி.எம். ரிஷிவர்மா சிறந்த மல்யுத்த வீரராகவும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சாய்ஸ்ரீமதி சிறந்த மல்யுத்த வீராங்கனையாகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.

வெற்றி பெற்றவீரர்-வீராங்கனைகளுக்கு JKKN கல்வி நிறுவனங்களின் இயக்குனர் செ.ஓம்சரவணா, தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்க பொதுச்செயலாளர் எம்.லோகநாதன் ஆகியோர் சுழற்கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவப்படுத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!