தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் ஜே.கே.கே.ரங்கம்மாள் மாணவிக்கு வெண்கலம்

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில்  ஜே.கே.கே.ரங்கம்மாள் மாணவிக்கு வெண்கலம்
X

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற மாணவி வளர்நிலாவை பாராட்டிய ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை, இயக்குனர் ஓம் சரவணா ஆகியோர். உடன் தலைமை ஆசிரியை செல்லம்மாள்.

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் ஜேகேகே ரங்கம்மாள் ஆரம்பப்பள்ளி மாணவி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தேசிய அளவிலான 18-வது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜேகேகே ரங்கம்மாள் ஆரம்பப்பள்ளி மாணவி வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் நடத்திய 18-வது தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மார்ச் 2ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் டெல்லி, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ஹரியானா, ஆந்திரா, உத்திரபிரதேசம், கேரளா,பாண்டிச்சேரி, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து 1250 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.


இதில் 11 வயதுக்கு கீழ் உள்ளோருக்கான மினிசப்-ஜூனியர் பிரிவுப் போட்டியில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜே.கே.கே.ரங்கம்மாள் ஆரம்பப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவி M.K. வளர்நிலா, ஒற்றை சுருள்வாள் வீச்சு பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற பள்ளி மாணவியை ஜே.கே.கே.என் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை மற்றும் நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா ஆகியோர் பாராட்டினர். பயிற்சி அளித்த ஆசிரியருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். பாராட்டுதலின்போது தலைமையாசிரியை செல்லம்மாள் உடன் இருந்தார்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்