புதுக்கோட்டை சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கல்

புதுக்கோட்டை சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு அமைச்சர்  பரிசு வழங்கல்
X

புதுக்கோட்டையில் நடந்த சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு அமைச்சர் ரகுபதி பரிசு,விருது வழங்கினார்.

இப்போட்டியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வீரர் வீராங்கனைகள் பங்கு பெற்றனர்

புதுக்கோட்டையில் நடந்த சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு அமைச்சர் ரகுபதி பரிசு,விருது வழங்கினார்.

புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல் கல்லூரியில் இரண்டாவது சாய் சரவணா அகாடமி சர்வதேச ரேட்டிங் சதுரங்கபோட்டி நிறைவு பெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வீரர் வீராங்கனைகள் பங்கு பெற்றனர். இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை அமைச்சர் . ரகுபதி கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

சென்னையைச் சேர்ந்த விஜய் ஸ்ரீராம் முதல் பரிசையும், மதுரையைச் சேர்ந்த செல்வமுருகன் இரண்டாமிடத்தையும், சென்னையைச் சேர்ந்த சரவணன் மூன்றாமிடத்தையும், மதுரையைச் சேர்ந்த அருள் பிரகாஷ் நான்காமிடத்தையும், சிவகங்கையைச் சேர்ந்த கண்ணன் ஐந்தாமிடத்ததையும் வென்றனர். இப்போட்டியில் நானூறுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டனர்.திருச்சியை சேர்ந்த சர்வதேச நடுவர் தினகரன் இப்போட்டியினை நடத்தினார்.

முதல் பரிசு ரூபாய் இருபத்தைந்தாயிரம் உட்பட150க்கும் மேற்பட்ட ரொக்கப்பரிசுகள், வெற்றிக்கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சாய் சரவணா அகாடெமியின் அடைக்கலவன், அங்கப்பன், பேராசிரியர் கணேசன் உள்ளிட்ட மாவட்ட சதுரங்க கழக நிர்வாகிகள் மற்றும் செந்தூரான் பொறியியல் கல்லூரியின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story
ai as the future