ஒலிம்பிக் ஈட்டி எறிதல் -இந்தியவீரர் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு தகுதி

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் -இந்தியவீரர் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு தகுதி
X

இந்திய வீரர் நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. அதில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்களில் ஒருவர் நீரஜ் சோப்ரா.

இந்நிலையில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட நீரஜ் சோப்ரா தனது முதல் வாய்ப்பில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார். இதன்மூலம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற்றார். இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் ஈட்டி எறிதலுக்கான இறுதிச்சுற்று போட்டியில் அவர் கலந்து கொள்வார். முன்னதாக உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் 86.48 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து ஜூனியர் அளவில் உலக சாதனை படைத்து, தங்க பதக்கமும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!