உலக கால்பந்தில் 3ஆம் இடம் பிடித்த இந்திய வீரர்
இந்திய கால்பந்து வீரர் சுனில்செத்ரி.
லயோனல் மெஸி மற்றும் ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக அதிக கோல் அடித்த தரப்பட்டியல் வரிசையில் மூன்றாவது இடத்தில் இடம் பிடித்திருந்த இரானின் அலி தாயி என்ற வீரரை பின்னுக்குத்தள்ளி சுனில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தங்க காலனி, தங்க பந்து ஆகிய விருதுகளை தட்டி சென்ற இந்திய அணி கேப்னும் நட்சத்திர வீரருமான சுனில் சேத்ரி, அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் புரிந்தார்.
இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கினார்.பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.மேலும் இந்த தொடரில் அதிக கோல் அடித்தவர் வரிசையில் அவரே 5 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
தொடரில் அதிக கோல் அடித்தவருக்கு வழங்கப்படும் தங்க ஷூ விருதையும் அவரே வென்று உள்ளார். மேலும் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டதால் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதன்படி தொடர் நாயகனுக்கு வழங்கப்படும் தங்க பந்து விருதும் அவருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டு உள்ளது.
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் குவைத் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இதையடுத்து சாம்பியன் கோப்பையை பெற்ற இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி, அணி வீரர்களிடம் ஒப்படைத்து அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை ரசித்து பார்த்தார்.
ஏற்கனவே இவரை கால்பந்தாட்டக்களத்தின் ஆசிய ஐக்கான் என்ற அடையாளத்துடனே அனைவரும் பெருமைப்படுத்தி வந்தனர். இவரது தந்தை கே.பி.செத்ரி ஒரு ராணுவப் பணியாளர் ஆவார். மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்துவிட்டு ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டே இந்திய ராணுவ கால்பந்திலும் விளையாடியவர். அவரது தாய் சுசிலா செத்ரி நேபாளத்தை பூர்வீகமாக கொண்டவர். அவரும் நேபால் பெண்கள் கால்பந்தில் தேசிய அளவில் விளையாடியவர். சுனிலின் இரட்டை சகோதரியும் நேபால் அணிக்காக விளையாடியவர் ஆவார்.
20 வருடமாக 142 சர்வதேச போட்டிகளில் 93 கோல்களை அடித்தவர் சுனில். எனது உணவும் அதற்கேற்ற உறக்கமும் தேவையான பயிற்சியும் என்னை உருவாக்கியது. நான் புரோக்கலி சாப்பிட்டேனா இல்லை பிரியாணி சாப்பிட்டேனா என்பதல்ல விஷயம். கடவுள் எனக்கான வலிமையை கொடுத்தார் எனக்கூறி தனக்கு சர்வதேச அளவில் கால்பந்தில் மூன்றாம் இடம் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறுவதாக தெரிவித்துள்ளார்.
தோனியை மட்டுமே கொண்டாடும் நம் இந்தியர் பலருக்கு இவரைப்பற்றி தெரிந்துகொள்ள நேரமில்லை. இருபதாண்டு காலமாக இந்திய கால்பந்தாட்ட அணிக்காக விளையாடி வரும் இவர் 18 வயதில் தேசிய அணியில் இணைக்கப்பட்டவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu