அண்ணன் கோலி ஐடியா தந்தார்..! தம்பி ஹர்திக் பாண்டியா விளாசினார்..!

3வது ஒருநாள் போட்டியை வழிநடத்திய ஹர்திக் பாண்டியா அணியின் வெற்றிக்கு கோலி கொடுத்த குறிப்புகளே காரணம் என்று மனம் திறந்து கூறியுள்ளார்.

IND vs WI 3rd ODI, Hardik Pandya Celebrates Virat Kohli for the Victory, Credit Goes to Virat-Hardik Pandya praised

IND vs WI, 3வது ஒருநாள் போட்டி :

நேற்று (ஆகஸ்ட் 01) நடந்த ஒருநாள் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டியில் 'விராட் கோலியுடன் பேசிக்கொண்டிருந்தபோது கிடைத்த அற்புதமான ஐடியா வெற்றியை உறுதி செய்தது. ' என்று ஹர்திக் பாண்டியா கோலியை பாராட்டினார்.

டிரினிடாட்டில் நேற்று (ஆகஸ்ட் 01) நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்று கணக்கில் கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம், 2007 ஆம் ஆண்டு முதல் விண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து 13வது ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. தொடர் வெற்றிக்குப் பிறகு, ஸ்டாண்ட்-இன் கேப்டன் ஹர்திக் தனது 'விராட் கோலி உடனான பேச்சு அற்புதமான வெற்றிக்கு வழிவகுத்தது ' தொடரின் வெற்றியைத் தீர்மானிப்பதில் இந்த ஆட்டம் ஒரு சுழலும் சூறாவளி என்று விராட் கோலியை ஹர்திக் பாண்டியா பாராட்டினார்.


முடிவுற்ற போட்டிபோலவே இந்த போட்டியிலும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு மீண்டும் ஓய்வு அளிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்த இந்திய அணி, ஹர்திக் தலைமையில் இஷான் கிஷான் 77, ஷுப்மான் கில் 85, சஞ்சு சாம்சன் 51 மற்றும் ஹர்திக் 52 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் 5 விக்கெட்டுக்கு 351 ரன்கள் எடுத்தனர். அபாரமாக விளையாடி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை மற்றும் வரவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு இந்திய அணி தொடர்ந்து தயாராகி வரும் நிலையில், ஹர்திக்கின் ஆட்டம் இந்தியாவுக்கு நல்ல நேரத்தில் கிடைத்தது.

அவரது கடைசி ஐந்து ஸ்கோர் 7, 5, 40, 1 மற்றும் 25 ஆகும். இந்த குறைவான ஸ்கோர் வரிசையை அடித்து துவம்சம் செய்தால்தான் வெற்றி கிடைக்கும் என்பதை ஹர்திக் முடிவு செய்திருந்தார். 29 வயதான அவர் தொடரை தீர்மானிப்பதில் தனது முழுமையான அர்ப்பணிப்பை வழங்கி அணியை வழிநடத்தினார்.

இந்த நேரத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி ஹர்திக்கிற்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியதை பாராட்டிய ஹர்திக், அந்த வழிகாட்டுதலே வெற்றியை உறுதி செய்ததாக கோலியைப் பாராட்டினார்.

போட்டி முடிந்த பின் ஹர்திக் , "சில நாட்களுக்கு முன்பு நான் விராட் உடன் மிகவும் அருமையாக பேசிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் அவர் எனக்கு அளித்த வழிகாட்டுதல்கள் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. அவர் என்னை பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறார்.சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே கிட்டத்தட்ட ஏழு அல்லது எட்டு வருடங்கள் அவர் என்னை பார்த்திருக்கிறார்.


அதனால் எனது ஆட்டத்துக்கு ஏற்ப அவர் சில குறிப்புகளை எனக்கு வழங்கினார். நான் கிரீஸில் சிறிது நேரம் செலவழித்து 50 ஓவர் ஆட்டத்திலும் பழக வேண்டும் என்று அவர் விரும்பினார். ஏனென்றால் நாங்கள் பல டி20 வடிவங்களில் மட்டுமே விளையாடியுள்ளோம். ஆம், அதேபோலவே 50 ஓவர் ஆட்டங்களிலும் எனது விளையாட்டு என் மனதில் நிலைத்துவிட்டது. அதை கோலி மாற்றினார். நான் வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். விளையாடினேன். வெற்றிபெற்றேன். அந்த அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்ட கோலிக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்."

ரோஹித் மற்றும் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டது இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒரு முன்னெடுப்பே. ராகுல் டிராவிட் தலைமையிலான அணி நிர்வாகத்தின் முடிவை ஹர்திக் ஏற்றுக்கொண்டார். "விராட் மற்றும் ரோஹித் இருவரும் அணியில் மிகவும் ஒருங்கிணைந்த பங்கெடுப்பாளர்கள்.

இதைப்போன்ற சூழ்நிலையில்தான் இளைஞர்களுக்கு தலைமைப்பொறுப்பைக் கொடுத்து அவர்களின் வழிகாட்டும் திறன்களை கொண்டுவரமுடியும். மேலும், ருது, அக்ஸர் போன்றவர்களுக்கு இது மிகவும் முக்கியமானது என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் பல வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருவதால், ஒரு கேம் அல்லது விளையாட்டைப் பெறுவதற்கு, இந்த சூழ்நிலை அவர்களுக்கு உதவலாம். அதனால் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு நாம் எதையாவது சரிபார்க்க விரும்பினால், அதை உறுதிப்படுத்திக் கொள்ள நாம் சாதிக்க வேண்டும். அதைச் செய்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு உள்ளது." என்றார் இளைய கேப்டன் ஹர்திக்.

நாளை (ஆகஸ்ட் 3ம் தேதி) கரீபியன் தீவில் தொடங்கும் விண்டீஸ் அணிக்கு எதிராக வரவிருக்கும் ஐந்து T20 போட்டிகளில் ஹர்திக் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்துவார். ஜமாய்ங்க கேப்டன்.

ஹர்திக் பாண்டியா 3வது ஒருநாள் போட்டியில் தோனியைப் போன்ற இன்னிங்ஸை விளையாடினார், அவர் பொறுப்பேற்பதைப் பார்ப்பது நல்லது: ஹனுமா விஹாரி

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!