மனைவியை போதையில் அடித்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது போலீஸ் எஃப்ஐஆர் பதிவு

மனைவியை போதையில் அடித்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது போலீஸ் எஃப்ஐஆர் பதிவு
X

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி.(கோப்பு படம்)

FIR registered against former cricketer Vinod Kambli-முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது மும்பை, பாந்த்ரா போலீஸ் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி, சச்சின் டெண்டுல்கருடன் சிறு வயதில் இருந்து விளையாடிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆவார். சிறு வயதில் சச்சினோடு இணைந்து விளையாடி பல சாதனைகளை உருவாக்கியவர்.

FIR registered against former cricketer Vinod Kambli

வினோத் காம்ப்ளியின் மனைவி ஆண்ட்ரியா, அவர்மீது மும்பை போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவரது கணவர் வினோத் காம்ப்ளி மது போதையில் தன்னை சமையல் பாத்திரத்தை எடுத்து தலையில் அடித்து தகாத வார்த்தைகளால் தன்னை பேசினார். அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

பாந்த்ரா போலீசார் வினோத் காம்ப்ளி மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். ஆனால் இன்னும் கைது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தகவல் வந்துள்ளது. இதுகுறித்து மும்பை போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


FIR registered against former cricketer Vinod Kambli

முன்னாள் கிரிக்கெட் வீரர் இவ்வாறு தனது மனைவியை அடித்து தகாத வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பது, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுளளது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காம்ப்ளி,இந்திய முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர், இந்தியாவுக்காக இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், மும்பை மற்றும் போலண்ட், தென்னாப்பிரிக்காவிற்காகவும் விளையாடியவர். காம்ப்ளி தனது பிறந்தநாளில் சர்வதேச ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் ஆனார். அவரது கேரியரின் முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளில், இரண்டு இரட்டை சதங்கள் உட்பட 113.29 சராசரியில் 793 ரன்கள் குவித்தார் காம்ப்ளி.

FIR registered against former cricketer Vinod Kambli

அவர் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் வர்ணனையாளராகத் தோன்றினார். மேலும் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் அனுபவசாலியாக மராத்தி செய்தி சேனலில் பணியாற்றினார் அவர் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் ஒரு பகுதியாக இருந்துள்ளார். மேலும் ஒரு சில சீரியல்கள் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். பெட்டனகெரே என்ற கன்னடத் திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்தார். மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கான கிரிக்கெட் மேம்பாட்டுக் குழுவில் தற்போது காம்ப்ளி உள்ளார்.

Tags

Next Story