பெங்கால் டைகர் கங்குலி பிறந்தநாள்
சௌரவ் சந்திதாஸ் கங்குலி
'பெங்கால் டைகர்' என்ற செல்லப்பெயரோடும் கொல்கத்தா இளவரசர் என்றும் தாதா என்றும் அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படும் சௌரவ் கங்குலியின் 49 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தாதா என்பதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்பது அர்த்தமாகும்
மேற்கு வங்க மாநிலத்தில் 1972 ம் ஆண்டு பிறந்தவர் சௌரவ் சந்திதாஸ் கங்குலி. ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக விளங்கிய கங்குலிக்கு தன் அண்ணன் பயிற்சியை பார்த்து தான் கிரிக்கெட் மீது ஆர்வம் வந்தது.சௌரவ் கங்குலி, இவரின் மூத்த சகோதரர் சினேஹாசிஷால் கிரிக்கெட் உலகத்திற்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். இயல்பாக இவர் வலது கை பழக்கம் உள்ளவர். ஆனால் இடது கை ஆட்டக்காரராக தன் பயிற்சியை தொடங்கினார். தொண்ணூறுகளில் கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கைப் பயணம் தொடங்கியது.
மைதானத்தின் ஓரத்தில் அமைதியாய், நின்று கொண்டிருந்தாலும் ஏதோ ஒரு விஷயம் கங்குலியை கவனிக்கத் தக்கவராய் மாற்றியது. அந்த அலட்சியமான தலை அலங்காரம். அரும்பு மீசையும் குறும்பு பார்வையுமாய் மைதானத்தில் வலம் வந்த கங்குலி மீது முதலில் ஒரு பேட் பாய் லுக்தான் இருந்தது. அதுவே பின்னர் குட்பாய் லுக்கிற்கு உயர்த்தியது.
"உலகிற்கு கட்டாயம் என்னுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நிறைய உதடுகள் உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என கூறிவிடும்'' என்று அவ்வப்போது தத்துவமாக பேசி அசத்துவார் கங்குலி.
இந்திய அணியை 20 வருடங்களுக்கு பிறகு உலகக்கோப்பை இறுதிபோட்டிக்கு கொண்டு சென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றார் கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் முகத்தையே உலக அரங்கில் மாற்றினார் பெங்கால் டைகர் கங்குலி. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கேப்டன் கங்குலியின் சாதனைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளதை யாராலும் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu