தோனியை வசீகரித்த விமான பணிப்பெண் ரித்திகா..! வெட்கத்தில் முகம் சிவந்தார்..!

தோனியை வசீகரித்த விமான பணிப்பெண் ரித்திகா..! வெட்கத்தில் முகம் சிவந்தார்..!
X
தல தோனின்னா பெண்கள் சும்மா இருப்பார்களா என்ன? அந்த ஹீரோவை அன்(ம்)பால் ஈர்த்த விமான பணிப்பெண்.

விமான பயணத்தில் ஜன்னலுக்கு அருகில் அமைதியான நிலையில் அமர்ந்திருந்த எம்.எஸ். தோனிக்கு கிடைத்த ஒரு ஆச்சர்ய வரவேற்பு அவரை திக்குமுக்காடச் செய்தது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி ஐபிஎல் முடிந்த உடனேயே முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது ஓய்வில் உள்ளார். அவர் அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு செல்லும் விமான பயணத்தில் விமான பணிப்பெண்ணின் எதிர்பாராத செயல், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனின் மனதை ஆழமாகத் தொட்டது. 30,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது விமானப் பணிப்பெண், தோனியை அணுகி, பல்வேறு வகையான சாக்லேட்டுகள் நிரப்பப்பட்ட ஒரு தட்டை நீட்டினார். சற்று தடுமாறிய தோனி, மவுனமாக சிரித்தார்.

விமானப்பணிப் பெண்ணின் அன்பான, ஆர்வமான ஒரு உபசரிப்பைக் கண்ட கேப்டனின் முகத்தில் மறுக்கமுடியாத ஒரு புன்னகை அரும்பியது. அவரது முகத்தில் அந்த மகிழ்ச்சி தெரிந்தது. விமான பணிப்பெண் தோனியிடம் ஒரு குறிப்பு எழுதப்பட்ட சிறிய துண்டுச் சீட்டை கையில் கொடுத்தார். தோனி அதை மனதார ஏற்றுக்கொண்டார். அவர்களுக்கிடையில் என்ன பேசிக்கொண்டார்கள் என்ற வார்த்தைகள் பின்னணியில் ஒலிக்கும் பாடலால் அடக்கப்பட்டிருந்தாலும், தோனியின் உதட்டு அசைவுகள் விமானப் பணிப்பெண்ணின் உபசரிப்பை ஏற்றுக்கொண்டதற்கான நன்றியை வெளிப்படுத்தியது, தெரிந்தது.

கடைசியாக ஒரு சாக்லேட் கவரை எடுத்துக்கொண்ட தோனி, மீதமுள்ள சாக்லேட்டுகளுடன் தட்டைத் திருப்பிக் கொடுத்து, தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

நித்திகா என்று அழைக்கப்படும் ஏர் ஹோஸ்டஸ், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு சாக்லேட் கொடுத்து வரவேற்பு செய்த சம்பவத்தை மனதுக்குள் வைத்துக்கொண்டு அவரால் சும்மா இருக்க முடியவில்லை.


தனது விமான பயணத்தில் தோனியுடனான தருணத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் விமான பணிப்பெண் நித்திகா,

"சரி... ஒப்புக்கொள்கிறேன்!!! என்னால வெட்கப்படுவதை நிறுத்த முடியவில்லை; முழு விமானத்திற்கும் அல்ல, நாள் முழுவதும். நான் அவரை இப்படிச் சந்தித்ததை என்னால் நம்ப முடியவில்லை. எனது ஆல்-டைம் க்ரஷ், என் காதல், @mahi7781. எவ்வளவு பெரிய மனிதர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, மிகவும் அடக்கமானவர். கடவுளே... நான் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன்" என்று அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


கேண்டி க்ரஷ் விளையாடிய ஒரு டேப்லெட் தோனியின் அருகே பார்வையாளர்களளின் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தது. இது மற்றொரு மறக்கமுடியாத தோனியின் தருணத்தைக் குறிக்கிறது. தோனி கேமிங்கில் அதிக நாட்டம் கொண்டவர் என்பது பரவலாக அறியப்பட்டதுதான். குறிப்பாக கேண்டி க்ரஷ் அவரது ஆர்வத்தின் மற்றொரு சான்றாக இருந்தது. மேலும், தோனியின் எளிமை மீண்டும் ஒருமுறை இங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதை சக பயணிகளும் ஆச்சர்யமாக கவனித்தனர். ஆமாம், அவர் சாதாரண எகானமி வகுப்பில் பயணிக்கத் தேர்வு செய்தது அவரது எளிமையை உணர்த்தியது.

இந்த இணைப்பை க்ளிக் செய்து தோனியின் வீடியோ பார்க்கலாம்.

https://www.instagram.com/reel/Ctb7mRSpSFL/?utm_source=ig_embed&ig_rid=df884115-e512-4d66-bb93-6403f1ab50f9

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!