சச்சினுக்கு கரெக்சன் சொன்ன ஓட்டல் ஊழியர்..!
ஹோட்டல் ஊழியருடன் சச்சின்.
சச்சின் டெண்டுல்கரிடம் இருந்த குறையை ஒரு ஹோட்டல் ஊழியர் சுட்டிக் காட்டிய பின்னால் தான், சச்சின் அதை சரி செய்தார் . என்ன குறை அது?
மும்பையில் சச்சின் பை ஸ்பார்டான் (Sachin By Spartan ) என்ற நிகழ்ச்சி நடந்தது . அதில் சச்சின் பேசியதாவது:
யாரிடம் இருந்தும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால், பல விஷயங்களில் நாம் மேம்படலாம். சென்னையில் ஓர் ஹோட்டலில் தங்கியிருந்தேன். அப்போது ஒரு ஊழியர் (waiter ) என்னிடம் வந்தார் . தயங்கியபடியே, நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்றால், அவமதிப்பாக நினைக்க மாட்டீர்கள் என்றால் நான் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றார்.
சொல்லுங்கள் என்றேன்.
உங்கள் பேட் ஸ்விங் செய்வதற்கு elbow guard தடையாக இருக்கிறது போல தெரிகிறது என்றார். அவர் சொன்னது 100 சதவீதம் உண்மை. ஏதோ ஒரு விஷயம் அசௌகர்யமாக இருப்பது தெரிந்தது. ஆனால் அது என்னவென்று எனக்கு பிடிபடாமல் இருந்தது.
இந்த எல்போ கார்டு உறுத்தலாக இருப்பது எனக்கு தோன்றவே இல்லை. இரண்டு முறை பந்து எல்போ கார்டில் தாக்கியிருக்கிறது. அவர் சொன்ன பிறகு தான், எல்போ கார்டு தரமின்றி இருப்பதை உணர்ந்தேன். உடனடியாக அதை ரீடிசைன் செய்தேன்.
அதன் பிறகு பேட் ஸ்விங் செய்வதில் எந்த பிரச்னையும் இருக்கவில்லை. நம் நாட்டில் அடகுக்கடைக்காரர் முதல் ஒரு கம்பெனியின் சி.இ.ஓ வரை யார் வேண்டுமானாலும் உங்களுக்கு அறிவுரை சொல்லலலாம். நல்ல அறிவுரை யாரிடம் இருந்து வந்தாலும் , அதை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும் என பேசினார்.
ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கூட ஒருவித தலைமைப்பண்புதான்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu