Zodiac Sign Meaning in Tamil-ஜோதிடத்தில் ராசிகள் என்ன செய்கின்றன..? தெரிஞ்சுக்கங்க..!

Zodiac Sign Meaning in Tamil-ஜோதிடத்தில் ராசிகள் என்ன செய்கின்றன..? தெரிஞ்சுக்கங்க..!
X

zodiac sign meaning in tamil-ராசிகள் (கோப்பு படம்)

ஒருவரின் ஜாதகம் என்பது அவர் பிறக்கும் நேரம் மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. அதற்கேற்ப ராசியும் அமைகிறது.

Zodiac Sign Meaning in Tamil

மனிதன் இப்பிறவியில் செய்யும், பாவ புண்ணியத்திற்கேற்ப அவனின் மறுபிறப்பு நிர்ணயிக்கப்படுகின்றது. இந்தப் பிறவியில் அவன் செய்யும் புண்ணிய காரியங்கள், அடுத்த பிறவியில் அதிர்ஷ்டமான ஜாதகம் அமையுமாறு ஒரு கணத்தில் அவனை பிறக்கவைக்கிறது.

மறுபிறவியில் இந்தப் பூமியில் வாழும் அவன் வாழ்வு சந்தோஷங்களால் நிறைவடையும். மாறாக பாவ காரியங்களை செய்தவனின் அடுத்த பிறவி வாழ்வு, அதற்கான சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியதாக அமைந்துவிடும்.

Zodiac Sign Meaning in Tamil

பிறக்கும் அந்தக் கணத்திலேயே, கிரகங்கள் அவன் வாழ்வையும், எதிர்காலத்தையும் தீர்மானித்து விடுகின்றன என்பதை ஜோதிட சாஸ்திரக் கோட்பாடுகள் நிச்சயிக்கின்றன. ஆகவே ஜோதிட சாஸ்திரம், ஒருவன் பிறக்கும் போது இருக்கும் கிரக நிலைகளைக் கொண்டு வாழ்வின் நிலைகளை அனுமானிக்கும் சாத்தியப்பாடுகள் உடையதாய் இருக்கிறது.

Zodiac Sign Meaning in Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ராசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவைகளின் இருப்பிடம் மற்றும் அதன் சின்னங்கள் போன்றவை தரப்பட்டுள்ளன.

12 ராசிகளின் பெயர்கள்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

ராசிகளின் இருசாப்பிடம் மற்றும் சின்னங்கள்.

மேஷம் :

மேஷ ராசி ராசிச் சக்கரத்தில் முதல் வீடு. இதன் அதிபதி செவ்வாய். இது சர ராசி ஆகும். அக்னி தத்துவத்தைச் சார்ந்தது. ஆண் ராசி. இதன் உருவம் ஆடு. இதன் நிறம் சிகப்பு. இந்த ராசி தமிழ் மாதத்தில் முதல் மாதமாகிய சித்திரையைக் குறிக்கும்.

Zodiac Sign Meaning in Tamil


ரிஷபம்:

ரிஷபம் ராசி ராசிச் சக்கரத்தின் இரண்டாம் வீடு. இதன் அதிபதி சுக்கிரன். இது ஸ்திர ராசி ஆகும். நிலத் தத்துவத்தைச் சார்ந்தது. பெண் ராசி. இதன் உருவம் காளை. இதன் நிறம் வெண்மை. இந்த ராசி தமிழ் மாதத்தில் இரண்டாம் மாதமாகிய வைகாசியைக் குறிக்கும்.

மிதுனம்:

மிதுன ராசி ராசிச் சக்கரத்தின் மூன்றாம் வீடு. இதன் அதிபதி புதன். இது உபய ராசி ஆகும். காற்றுத் தத்துவத்தைச் சார்ந்தது. ஆண் ராசி. இது இரட்டைத் தன்மை கொண்ட ராசி. இந்த ராசி தமிழ் மாதத்தில் மூன்றாம் மாதமாகிய ஆனியைக் குறிக்கும்.

கடகம்:

கடகம் ராசி ராசிச் சக்கரத்தின் நான்காம் வீடு. இதன் அதிபதி சந்திரன். இது சுக ஸ்தானம் எனப்படும். இது சர ராசி ஆகும். நீர்த் தத்துவத்தைச் சார்ந்தது. பெண் ராசி. இதன் உருவம் காளை. இதன் நிறம் வெண்மை. இந்த ராசி தமிழ் மாதத்தில் இரண்டாம் மாதமாகிய ஆடியைக் குறிக்கும்.

Zodiac Sign Meaning in Tamil

சிம்மம்:

சிம்ம ராசி ராசிச் சக்கரத்தின் ஐந்தாம் வீடு. இதன் அதிபதி சூரியன். இது ஸ்திர ராசி ஆகும். நெருப்புத் தத்துவத்தைச் சார்ந்தது. ஆண் ராசி. இந்த ராசி தமிழ் மாதத்தில் ஐந்தாம் மாதமாகிய ஆவணியைக் குறிக்கும்.

கன்னி:

கன்னி ராசி ராசிச் சக்கரத்தின் ஆறாம் வீடு. இதன் அதிபதி புதன் இது உபய ராசி ஆகும். நிலத் தத்துவத்தைச் சார்ந்தது. பெண் ராசி. இது மக்கள் வாழும் பகுதியைக் குறிக்கும் இந்த ராசி தமிழ் மாதத்தில் ஆறாம் மாதமாகிய புரட்டாசியைக் குறிக்கும்.

Zodiac Sign Meaning in Tamil

துலாம்:

துலாம் ராசி ராசிச் சக்கரத்தின் ஏழாம் வீடு. இதன் அதிபதி சுக்கிரன். இது சர ராசி ஆகும். காற்றுத் தத்துவத்தைச் சார்ந்தது. ஆண் ராசி. இதன் உருவம் தராசு. இந்த ராசி தமிழ் மாதத்தில் ஏழாம் மாதமாகிய ஐப்பசியைக் குறிக்கும்.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசி ராசிச் சக்கரத்தின் எட்டாம் வீடு. இதன் அதிபதி செவ்வாய். இது ஸ்திர ராசி ஆகும். நீர்த் தத்துவத்தைச் சார்ந்தது. பெண் ராசி. இது பல கால் ராசி ஆகும். இந்த ராசி தமிழ் மாதத்தில் எட்டாம் மாதமாகிய கார்த்திகையைக் குறிக்கும்.

Zodiac Sign Meaning in Tamil

தனுசு:

தனுசு ராசி ராசிச் சக்கரத்தின் ஒன்பதாம் வீடு. இதன் அதிபதி குரு. இது உபய ராசி ஆகும். நெருப்புத் தத்துவத்தைச் சார்ந்தது. ஆண் ராசி. இது ஆன்மீகத்தைக் குறிக்கும் ராசி. இந்த ராசி தமிழ் மாதத்தில் ஒன்பதாம் மாதமாகிய மார்கழியைக் குறிக்கும்.

மகரம்:

மகர ராசி ராசிச் சக்கரத்தின் பத்தாம் வீடு. இதன் அதிபதி சனி. இது சர ராசி ஆகும். நிலத் தத்துவத்தைச் சார்ந்தது. பெண் ராசி. இந்த ராசி தமிழ் மாதத்தில் பத்தாம் மாதமாகிய தை மாதத்தைக் குறிக்கும்.

Zodiac Sign Meaning in Tamil

கும்பம்:

கும்ப ராசி ராசிச் சக்கரத்தின் பதினொன்றாம் வீடு. இதன் அதிபதி சனி. இது ஸ்திர ராசி ஆகும். காற்றுத் தத்துவத்தைச் சார்ந்தது. ஆண் ராசி. இந்த ராசி தமிழ் மாதத்தில் பதினொன்றாம் மாதமாகிய மாசி மாதத்தைக் குறிக்கும்.

Zodiac Sign Meaning in Tamil

மீனம்:

மீன ராசி ராசிச் சக்கரத்தின் பன்னிரண்டாம் வீடு. இதன் அதிபதி குரு. இது உபய ராசி ஆகும். நீர்த் தத்துவத்தைச் சார்ந்தது. பெண் ராசி. இந்த ராசி தமிழ் மாதத்தில் பன்னிரண்டாம் மாதமாகிய பங்குனி மாதத்தைக் குறிக்கும்.

Tags

Next Story