Zodiac Meaning In Tamil-ஜாதகத்தில் ராசிகள் என்பது என்ன? தெரிஞ்சுக்கங்க..!

Zodiac Meaning In Tamil-12 ராசிகள் (கோப்பு படம்)
Zodiac Meaning In Tamil
ஜோதிடம் என்பது ஒன்பது கோள்களின் இட மாறுதல்களை அடிப்படையாகக் கொண்டது. விண்ணில் இருக்கும் கோள்களின் நகர்தல் மண்ணில் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அந்த மாற்றங்கள் மனிதர்களுக்கும் ஆனது. அந்த மாற்றங்களின் நகர்வுகளை துல்லியாமாக கணித்து ஜோதிட சாஸ்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
Zodiac Meaning In Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 12 ராசிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகள் ஆகும்.
இந்த ராசிகள் ஒவ்வொன்றிற்கும் சில தனித்தன்மைகள் உள்ளன. அது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேஷம் :
மேஷ ராசி, ராசிச் சக்கரத்தில் முதல் வீடு. இதன் அதிபதி செவ்வாய். இது சர ராசி ஆகும். அக்னி தத்துவத்தைச் சார்ந்தது. ஆண் ராசி.இதன் உருவம் ஆடு. இதன் நிறம் சிகப்பு. இந்த ராசி தமிழ் மாதத்தில் முதல் மாதமாகிய சித்திரையைக் குறிக்கும்
Zodiac Meaning In Tamil
ரிஷபம்:
ரிஷபம் ராசி, ராசிச் சக்கரத்தின் இரண்டாம் வீடு. இதன் அதிபதி சுக்கிரன். இது ஸ்திர ராசி ஆகும். நிலத் தத்துவத்தைச் சார்ந்தது. பெண் ராசி. இதன் உருவம் காளை. இதன் நிறம் வெண்மை. இந்த ராசி தமிழ் மாதத்தில் இரண்டாம் மாதமாகிய வைகாசியைக் குறிக்கும்.
மிதுனம்:
மிதுன ராசி, ராசிச் சக்கரத்தின் மூன்றாம் வீடு. இதன் அதிபதி புதன். இது உபய ராசி ஆகும். காற்றுத் தத்துவத்தைச் சார்ந்தது. ஆண் ராசி. இது இரட்டைத் தன்மை கொண்ட ராசி. இந்த ராசி தமிழ் மாதத்தில் மூன்றாம் மாதமாகிய ஆனியைக் குறிக்கும்.
கடகம்:
கடகம் ராசி, ராசிச் சக்கரத்தின் நான்காம் வீடு. இதன் அதிபதி சந்திரன். இது சுக ஸ்தானம் எனப்படும். இது சர ராசி ஆகும். நீர்த் தத்துவத்தைச் சார்ந்தது. பெண் ராசி. இதன் உருவம் காளை. இதன் நிறம் வெண்மை. இந்த ராசி தமிழ் மாதத்தில் இரண்டாம் மாதமாகிய ஆடியைக் குறிக்கும்.
Zodiac Meaning In Tamil
சிம்மம்:
சிம்ம ராசி, ராசிச் சக்கரத்தின் ஐந்தாம் வீடு. இதன் அதிபதி சூரியன். இது ஸ்திர ராசி ஆகும். நெருப்புத் தத்துவத்தைச் சார்ந்தது. ஆண் ராசி. இந்த ராசி தமிழ் மாதத்தில் ஐந்தாம் மாதமாகிய ஆவணியைக் குறிக்கும்.
கன்னி:
கன்னி ராசி, ராசிச் சக்கரத்தின் ஆறாம் வீடு. இதன் அதிபதி புதன் இது உபய ராசி ஆகும். நிலத் தத்துவத்தைச் சார்ந்தது. பெண் ராசி. இது மக்கள் வாழும் பகுதியைக் குறிக்கும் இந்த ராசி தமிழ் மாதத்தில் ஆறாம் மாதமாகிய புரட்டாசியைக் குறிக்கும்.
துலாம்:
துலாம் ராசி, ராசிச் சக்கரத்தின் ஏழாம் வீடு. இதன் அதிபதி சுக்கிரன். இது சர ராசி ஆகும். காற்றுத் தத்துவத்தைச் சார்ந்தது. ஆண் ராசி. இதன் உருவம் தராசு. இந்த ராசி தமிழ் மாதத்தில் ஏழாம் மாதமாகிய ஐப்பசியைக் குறிக்கும்.
Zodiac Meaning In Tamil
விருச்சிகம்:
விருச்சிகம் ராசி, ராசிச் சக்கரத்தின் எட்டாம் வீடு. இதன் அதிபதி செவ்வாய். இது ஸ்திர ராசி ஆகும். நீர்த் தத்துவத்தைச் சார்ந்தது. பெண் ராசி. இது பல கால் ராசி ஆகும். இந்த ராசி தமிழ் மாதத்தில் எட்டாம் மாதமாகிய கார்த்திகையைக் குறிக்கும்.
தனுசு:
தனுசு ராசி, ராசிச் சக்கரத்தின் ஒன்பதாம் வீடு. இதன் அதிபதி குரு. இது உபய ராசி ஆகும். நெருப்புத் தத்துவத்தைச் சார்ந்தது. ஆண் ராசி. இது ஆன்மீகத்தைக் குறிக்கும் ராசி. இந்த ராசி தமிழ் மாதத்தில் ஒன்பதாம் மாதமாகிய மார்கழியைக் குறிக்கும்.
மகரம்:
மகர ராசி, ராசிச் சக்கரத்தின் பத்தாம் வீடு. இதன் அதிபதி சனி. இது சர ராசி ஆகும். நிலத் தத்துவத்தைச் சார்ந்தது. பெண் ராசி. இந்த ராசி தமிழ் மாதத்தில் பத்தாம் மாதமாகிய தை மாதத்தைக் குறிக்கும்.
Zodiac Meaning In Tamil
கும்பம்:
கும்ப ராசி, ராசிச் சக்கரத்தின் பதினொன்றாம் வீடு. இதன் அதிபதி சனி. இது ஸ்திர ராசி ஆகும். காற்றுத் தத்துவத்தைச் சார்ந்தது. ஆண் ராசி. இந்த ராசி தமிழ் மாதத்தில் பதினொன்றாம் மாதமாகிய மாசி மாதத்தைக் குறிக்கும்.
மீனம்:
மீன ராசி, ராசிச் சக்கரத்தின் பன்னிரண்டாம் வீடு. இதன் அதிபதி குரு. இது உபய ராசி ஆகும். நீர்த் தத்துவத்தைச் சார்ந்தது. பெண் ராசி. இந்த ராசி தமிழ் மாதத்தில் பன்னிரண்டாம் மாதமாகிய பங்குனி மாதத்தைக் குறிக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu