திருச்செந்துாரை ஏன் சுனாமி தாக்கவில்லை?
திருச்செந்தூர் கோயில்
தமிழக கடற்கரைப் பகுதிகளை சுனாமி தாக்கியபோது கடலுக்கு மிக அருகில் இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலை மட்டும் ஏன் தாக்கவில்லை என்று தெரியுமா? அதற்கான ஆன்மீக காரணமாக பக்தர்கள் நம்புவதைப் பற்றி இந்த பதிவில் காணலாம் வாங்க.
திருச்செந்தூர் கோயில் கடலுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. கோயிலுடைய மூலவர் சிலைக்கு முன்னாடி நின்று பார்த்தால் வெளியிலே இருக்கும் கடல் நீர் நமது தலைக்கு மேல் இருக்கும். இதை பார்க்கும்போது சுனாமி அலைகள் வந்தால் கோயிலை மூழ்கடிக்கும் சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளது.
டிசம்பர் 26, 2004 ல் ஏற்பட்ட சுனாமி கடற்கரை பகுதியை எல்லாம் அடித்து துவம்சம் செய்தது. திருச்செந்தூரிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் ஜீவா நகரில் கூட அதிகப்படியான சேதங்கள் ஏற்பட்டது. ஆனால் திருச்செந்தூர் முருகன் கோயிலில் எந்த ஒரு சேதாரமும் ஏற்படவில்லை. ஏனெனில், சுனாமி கோயிலை தாக்கவேயில்லை. அதற்கு மாறாக இரண்டு கிலோ மீட்டர் தண்ணீர் உள்வாங்கிச் சென்றது.
திருச்செந்தூர் முருகன் கோயிலை சுனாமி தாக்காததற்கு ஆன்மீகவாதிகள் இரண்டு காரணங்களை சொல்கிறார்கள். முதல் காரணம் என்னவென்றால், வருணபகவான் முருகனுக்கு ‘நான் என் எல்லையை தாண்டி வரமாட்டேன்’ என்று சத்தியம் செய்து கொடுத்திருப்பது ஒரு காரணம். இரண்டாவது காரணம், சூரபத்மனுக்கும், முருகப்பெருமானுக்கு போர் நடந்துக் கொண்டிருக்கிறது.
அப்போது சூரபத்மன் மலை போன்ற மாமரமாகி கடலுக்குள் மறைந்துக் கொள்கிறான். அப்போது முருகப்பெருமான் கடல்நீர் பாய்ந்து, பதுங்கி ஓடும்படியாக வடிவேலை எறிந்து மாமரமாக இருக்கும் சூரபத்மனை இரண்டாக பிளந்து சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார். சூரனை எதிர்த்து வேல் வீசிய எம்பெருமானின் வேலுக்கு பயந்து கடல் அலைகள் இன்றும் எத்தனையோ இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டு சீறுகின்ற நிலை வந்தாலும், எம்பெருமானின் வடிவேலுக்கு பயந்து பதுங்கி நிற்கிறது என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
இன்றுவரை திருச்செந்தூரை சுனாமி தாக்காமல் சென்ற நிகழ்வை பக்தர்கள் அதிசயமும், ஆச்சர்யமும் கலந்த நிகழ்வாகவே காண்கிறார்கள். முருகப்பெருமானின் சக்தியை உணர்வதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக கருதப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu