எதற்காக படைக்கப்பட்டோம்..? படைத்தவன் யார்? தெரியனுமா?
எப்படி படைப்பு உருவானது? (கோப்பு படம்)
சரி.எதற்காக படைக்கப்பட்டோம்? படைப்பின் ரகசியம்தான் என்ன? பிறக்கும் போதும் எதுவும் கொண்டுவரவில்லை, இறக்கும்போதும் எதுவும் கொண்டு போகப்போவதில்லை, இடையில் ஏனிந்த விளையாட்டு....
இதிலுள்ள சூட்சமமும் சூனியமும் என்ன..?
வாழ்க்கை என்பது பல ஆயிரம் கேள்விகளை கொண்ட ஒரு தேர்வு ஓரிரு கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்பதால் தேர்ச்சி அடைய முடியாது என்று அர்த்தமில்லை. பேய் என்பது இறந்த ஒருவரின் எண்ணப் பதிவுகளே. அவற்றால் உயிரோடிருக்கும் மனிதரின் மூளை என்கிற மீடியத்தை தொடர்பு கொண்டு அந்த உடலை இயக்க முடியும்.
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அணுக்களால் ஆனவை நாம் உட்பட. அதது கொண்டிருக்கும் தோற்றம் மட்டும் தான் மாறுபட்டவை. இல்லாததை இருப்பது போன்று காட்டுவதே இலியுஷன். பிரபஞ்ச பொருட்கள் அனைத்தும் Hardware போன்றது. அதை இயக்கும் மனது Software போன்றது. பிரபஞ்ச மனதில் உள்ள பதிவை மாற்ற முடியும் என்றால் பிரபஞ்சத்தையே மாற்றி அமைக்க முடியும். பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் வெடிப்பு உங்கள் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?
நாம் இங்கே விரல் சொடுக்கினால் கூட அதன் பாதிப்பு சூரியனில் தெரியும் என்கிறது அறிவியல். தியானம் என்பது செய்வதல்ல. சும்மா இருப்பதே தியானம். இறையை அடைவதை தவிர எதுவானால் அது லட்சியமாகாது. அது தற்காலிக வெற்றியே.
கேளுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். நீ மனதார கேட்டு விட்டு அது நிச்சயம். கிடைக்கும் என்று நம்பு அதோடு அது கிடைத்து விட்டதாக மனதில் காட்சிபடுத்து. அது கிடைத்தால் என்ன மகிழ்ச்சியை உணர்வாயோ அதை உணர். அது 100 சதவீதம் நிச்சயம் கிடைக்கும்.
ஏன் எப்படி என்பதை ஆராயாதே. கிடைத்து விட்டதாக மட்டும் நினை. ஏன் எப்படி என்பது பிரபஞ்சத்திற்கு உட்பட்டது. இன்றிலிருந்து மனதளவில் நினைக்கும் வார்த்தைகளின் இறுதி சொல் எதிர்மறை வார்த்தையாக இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். முடியும் நடக்கும் கிடைக்கும். இதை மட்டுமே பயன்படுத்தி வார்த்தைகளை முடிக்கவும். ஒரு மாதத்தில் உங்கள் வாழ்க்கை அற்புதமாக மாறுவது நிச்சயம். நம்மை மீறிய மாபெரும் சக்தி உண்டு.
அந்த சக்திக்கு நீங்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டுங்கள். அதுதான் உங்களை காக்கும் ரட்சகன் அதனிடம் ஒரு விஷயத்தை கேளுங்கள். அது நீங்கள் கேட்பதை கொடுப்பதற்காக கைகட்டி காத்து கொண்டிருக்கிறது. அது கண்டிப்பாக கொடுக்கும் என நம்புங்கள் எப்படி என்பதை ஆராயும் போது உங்களுக்கு எதிர்மறை சிந்தனை தான் வரும். அந்த மாபெரும் சக்தி நிச்சயம் உதவும். இரகசியம் புலப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu