'சனாதன' தர்மம் என்பது என்ன?

Sanatana Dharma Meaning in Tamil-தர்மச்சக்கரம். சனாதன தர்மத்திற்கான மாதிரி படம்.
Sanatana Dharma Meaning in Tamil--'சன' என்ற பொருளின் அடிப்படையில் பார்க்கும்போது 'சனம்' என்ற வார்த்தை 'மக்கள்' என்பதைக்குறிக்கும். 'தனம்' என்பது செல்வம். ஆகவே, 'சனாதனம்' என்பதை 'மக்களுக்கான செல்வம்' அல்லது 'மக்களின் செல்வம்' என்று கூறலாம். எது உண்மையான செல்வம் என்ற கேள்வி இங்கு எழும்? பொருட்செல்வம் என்பது மனிதருக்கு உண்மையான செல்வம் அல்ல.
'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை' - என்கிறார் வள்ளுவர்.
அதாவது ஒருவருக்கு அழியாத செல்வம் கல்வியே. மற்றவை செல்வம் ஆகாது என்கிறார். ஆகவே, சிறந்த கல்வி கற்ற ஒருவர் அறிவு, ஞானம், ஒழுக்கம்,இரக்கம்,அன்பு, பண்பு, பணிவு,கருணை,நம்பிக்கை என பல்வேறு நற்பண்புகளை பெற்றிருப்பர். இந்த அழியாத நற்பண்புகளே இந்து மதத்தில் தர்மம் எனப்படுகிறது. இப்படியான சிறந்த பண்பை பெற்றதாலேயே மஹாபாரதத்தில் 'தர்மன்' என்ற பெயர் உருவானது. இந்து இதிகாசங்களில் மஹாபாரதம் மற்றும் ராமாயணம் முக்கிய இடம் பிடிப்பவையாகும். தர்மனை பொறுமைக்கு எடுத்துக்காட்டாக கூறுவது இந்துக்களின் வழக்கம். எமனுக்கும் தர்மன் என்ற பெயர் உண்டு.எமதர்மன் என்போம். அதாவது 'எமன்' உயிரை எடுக்கும்போது சில அடிப்படை தர்மங்களை கவனத்தில் கொண்டுதான் உயிரை எடுக்கிறான் என்று பொருள் கொள்ளலாம். எனில் எமன் பின்பற்றுவது கூட 'சனாதன தர்மம்' என்று சொன்னால் அது தவறில்லை.
எனில், சனாதன தர்மம் என்பது நிலைத்து நிற்கும் தத்துவங்கள் எனலாம். இந்து மதம் ஆன்மிகம் நிறைந்த ஒரு பழமையான மதம். இதை யார் உருவாக்கினார்கள் என்பது எமக்குத்தெரியாது. இந்து மதத்தில் உள்ள பல இதிகாசங்கள்,உபநிடதங்கள் போன்ற புராண காலத்து இலக்கியங்களில் கூறப்பட்ட நற்கருத்துக்களின் தொகுப்பே 'சனாதன' தர்மம். அதாவது மக்களுக்கான தர்மம். 'சனம்' என்பதே மருவி பொருள்கொள்வதற்காக 'சனா' என்று உருவெடுத்திருக்கும். 'தனம்' என்ற செல்வத்துடன் சேர்த்து பொருள் கொண்டால் 'சனாதனம்' என்பது 'மக்களுக்கான செல்வம்' அல்லது 'மக்களின் செல்வம்' எனலாம்.
மேலும், இந்து மக்களால் பின்பற்றப்பட்ட பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், கொண்டாடிய விழாக்கள், அவர்கள் பின்பற்றிய சடங்குகள், சமய நூல்களில் கூறப்பட்டிருந்த நற்பண்புகள், இறை நம்பிக்கை போன்றவைகளின் உட்கூறுகளே சனாதன தர்மம். இந்த சனாதன தர்மம் எல்லா மதங்களுக்கும் பொதுவானதாகத்தான் இருக்கும். காரணம் எல்லா மதங்களும் போதித்திருப்பது நற்கருத்துகளை மட்டுமே.
முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பதை அடிப்படையாகக் கொண்ட எல்லா சமய கருத்துக்களும் இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கு இட்டுச் செல்வதையே வலியுறுத்துகின்றன. இன்னும் சொல்லப்போனால் அப்பழுக்கற்ற ஒரு தூய்மையான நிலையை பின்பற்றுபவர் சனாதன தர்மத்தை கடைபிடிப்பவர் எனலாம்.
what is sanatana dharma
இந்து சனாதன தர்மத்தில் 6 தூண்கள் என்று கூறப்படுவது :
1. உயிருள்ள ஜீவன்களிடம் கருணை கொள்வது
2. இயற்கையை நேசிப்பது
மனிதனது வாழ்க்கை இயற்கையோடு தொடர்புடையது என்பதை உணர்த்துவதற்காக.
3. ஞானம் பெறுதல் (அறிவு தெளிதல்)
4. சுய தூய்மை - சுய ஒழுக்கம்
5. குருவை மதிப்பது - அவர் இருளை நீக்குபவர். அகக்கண் திறந்து ஒளி தருபவர்.
6. தன்னை உணர்தல் : ஆன்மீக வாயிலாக தன் நிலை அறிதல்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu