'கர்மா' என்றால் என்ன..? அது என்ன செய்யும்..? தெரிஞ்சுக்கங்க..!
what is karma in tamil-கர்மா (கோப்பு படம்)
What is Karma in Tamil, Karma Meaning
கர்மாவின் உண்மையான அர்த்தம் என்ன?
கர்மாவை இரண்டு வார்த்தைகளாகப் பிரிக்கலாம்: கர் என்றால் செய், கர் என்பது ஒரு உத்தரவு அல்லது கட்டளைச் சொல், அதாவது செய் அல்லது செய். "மா" என்ற வார்த்தையின் அர்த்தம் "பிரபஞ்சத்தின் உருவாக்கம்". எனவே, கர்மா என்பது பிரபஞ்சத்தின் படைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றைச் செய்வது கர்மா ஆகும்.
கர்மா என்பது என்ன?
கர்மா என்பது நாம் செய்யும் செயலுக்கான வினை. அதாவது எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம். மறுமையில் மட்டும் அல்ல இம்மையிலும்.
What is Karma in Tamil,
பிராரப்த கர்மா என்றால் என்ன?
பிராரப்த கர்மா என்பது சஞ்சித கர்மாவின் ஒரு பகுதியாகும். இது கடந்தகால கர்மாக்களின் தொகுப்பாகும். அவை தற்போதைய உடல் ( அவதாரம் ) மூலம் அனுபவிக்க தயாராக உள்ளன. சுவாமி சிவானந்தாவின் கூற்றுப்படி: "பிராரப்தம் என்பது கடந்தகால கர்மாவின் தற்போதைய உடலுக்குப் பொறுப்பாகும்.
What is Karma in Tamil,
சஞ்சித கர்மம் அல்லது சேமித்த வினைப்பயன்
இது நல்வினை மற்றும் தீவினை அனைத்தின் தொகுதி. வரும் பிறவிகளில் செயல்படப் போவது இவ்வினைப்பயனே. இந்தப் பிறவியில் இவ்வினைப்பயன் செயல்படாத நிலையில் உள்ளது. இதிலிருந்து ஒரு பகுதிதான் பிராரப்த கர்மமாக ஒரு குறிப்பிட்ட பிறவியில் செயல்படுகிறது.
புண்ணிய கர்மா என்பது என்ன?
புண்ணிய கர்மா செய்திருந்தால், அடுத்த ஜென்மத்தில் குறை எதுவுமின்றி சுகமாக வாழலாம்; பாவ கர்மா செய்திருந்தால், ஏதோ ஒரு ஏழ்மையான இடத்தில் சில ஊனங்களுடன் பிறக்க வேண்டி இருக்கும். அப்போது தெய்வத்தை நிந்தித்து பயனில்லை. சிறு வயதிலேயே சிலர் புத்திசாலிகளாகவும், சிலர் முட்டாள்களாகவும் இருப்பர். சிலர், உடல் ஊனத்தோடு பிறக்கின்றனர்.
What is Karma in Tamil,
கர்ம வினை தீர என்ன செய்ய வேண்டும்?
பிரதோஷம் அன்று 2 வில்வ இலைகளை மென்று விழுங்க வேண்டும். அப்போது எங்களின் கர்ம வினைகள் எல்லாவற்றையும் தீருங்கள் சிவபெருமானே என்று மனமுருகி வழிபட வேண்டும். இந்த இலை கொஞ்சம் கசந்தாலும் உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நம் கர்ம வினைகளையும் போக்கும் என்பது நம்பிக்கை. நம் உடலில் 3 மலத்தை நீங்க வேண்டும்.
கர்மயோகி என்றால் என்ன?
கர்மயோகம் என்பது பற்றி விவேகானந்தர் அற்புதமாக விளக்கியிருக்கிறார். கர்மம் என்றால் செயல். நம்முடைய செயல் சேவை மனப்பான்மையோடு இருக்கவேண்டும், தவிர ஏதோ கொடுத்த கடமைக்காக செய்தோம் சம்பளம் வாங்கினோம் என்று இருக்கக் கூடாது. யார் தன்னுடைய பணியில் தன்னை முழுமையாக அர்பணித்து கொள்கிறார்களோ அவர்களே கர்மயோகி.
விதி கர்மா என்றால் என்ன?
கர்மாவிற்கு பல சட்டங்கள் உள்ளன. ஆனால் யாராவது சட்டத்தைப் பற்றி பேசுவதை நீங்கள் கேட்டால், அது பொதுவாக காரணம் மற்றும் விளைவு விதி, இது பெரிய சட்டம் அல்லது கர்மாவின் சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. அடிப்படையில், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்வினை இருக்கும் என்று கர்மா விதி கூறுகிறது.
What is Karma in Tamil,
கர்ம யோக ஜாதகம் என்றால் என்ன?
தரம் - கர்ம யோகம் என்றால் என்ன? இது ஒரு சில அதிர்ஷ்டசாலிகளின் ஜாதகங்களில் காணப்படும் மிகவும் அதிர்ஷ்டமான மற்றும் அரிதான கிரகங்களின் கலவையாகும். இந்த யோகத்தில் இரண்டு கிரகங்களும் இணைந்து அல்லது சேர்ந்து ஒரு விதிவிலக்கான சக்தியையும், தொழில் வெற்றியையும், செல்வத்தையும் தருகிறது.
தலைவிதி என்றால் என்ன?
ஊழ் என்பதைத் தலைவிதி என்று பரவலாக புரிந்துகொள்ளப்படுகிறது. பிறக்கும்போதே தலையில் எழுதப்பட்ட விதி என்று பொதுவாகக் கருதப்படுகிறது. வள்ளுவர்கூட இதனை 'வகுத்தான் வகுத்த வகை' எனக் குறிப்பிடுகிறார். ஊழ் என்னும் சொல் ஊழ்வினையை உணர்த்தும் நிலைக்கு வந்ததாகவும் கருதப்படுகிறது.
What is Karma in Tamil,
தாரதோஷம் என்றால் என்ன?
பொதுவாக திருமணமானவர்கள் பிரிந்து வாழ்வது மற்றும் விவாகரத்துக்கான காரணங்களும் தார தோஷம் என்று கூறப்படுகிறது. ஏழாவது வீடு என்பது களத்திர ஸ்தானம் ஆகும். குரு நேரடி பார்வையாக ஏழாவது வீட்டைப் பார்க்கும் பொழுது அது சுப பார்வையாக மாறி திருமணம் கைகூடும்.
களத்திர தோஷம் என்ன செய்யும்?
களத்திர தோஷம் ஏற்படுவதால் திருமணத் தடை ஏற்படும். அப்படியே திருமண வாழ்க்கை அமைந்தாலும் அவரின் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாத, நிம்மதியற்ற நிலை ஏற்படும். இது போன்ற கெடுதிகள் எல்லாவற்றிற்கும் காரணமாக விளங்குவது 5ம் பாவமாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu