என்ன செய்தால் புண்ணியம் சேரும்?

என்ன செய்தால் புண்ணியம் சேரும்?
X
நமது பாவ, புண்ணிய சக்திகளை அறிந்து கொள்வது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்.

நமது வீட்டுக்கு உணவு தேடி வரும் கால்நடைகள் (பசு,நாய், போன்றவை) மற்றும் உயிர் இனங்கள் (காகம், அணில், புறா, போன்றவை) எல்லாம் நமக்கு புண்ணிய சக்தியை அதிகரிக்க உதவும்.

உங்களது வீட்டில் உயிர் சக்தி ஓட்டம் இருந்தால் தான் இதுபோன்று நடைபெறும். நமது ஜாதகத்தில் உள்ள கண்டம், தோஷம், வீட்டின் வாஸ்து தோஷம் போன்ற எல்லா குறைகளையும் இந்த கால்நடை மற்றும் உயிரினங்கள் ஏற்றுக் கொள்ளும்.

இதை உங்களது அனுபவத்தில் புரிந்து கொள்ளலாம். இரண்டாவது உணவு மற்றும் நீர் தேடி நமது வீட்டுக்கு வரும் உயிரினங்கள் எல்லாம் நமக்கு நன்மையை தரும். உணவு மற்றும் நீர் தேடி நமது வீட்டுக்கு வரும் உயிர் இனங்களை துன்புறுத்தாமல் அதற்கு மதிப்பு கொடுத்து உணவு, நீர் தருவது நமது கர்ம வினைகளை குறைக்கும்.

நமக்கு புண்ணியம் அல்லது பாவம் இரண்டில் எது அதிகமாக உள்ளது என்று எப்படி நாம் தெரிந்துகொள்வது. உங்களது உடல் மீது எவ்விதமான பயமும் இல்லாமல் ஒரு பறவை வந்து அமர்ந்து கொண்டால் அல்லது நீ போகும் இடத்தில் எல்லாம் பறவைகள் பிராணிகள் உங்களை நாடி வந்தால் உங்களுக்கு புண்ணிய சக்தி அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

உங்களை நாடி வரும் பறவைகள் மற்றும் பிராணிகளுக்கு உணவு, நீர் தருவது புண்ணிய சக்தியை அதிகரிக்கும். நீங்கள் பாவம் அல்லது புண்ணிய பகுதியில் எதில் உள்ளீர்கள்? என்பதை பிரபஞ்சம் உங்களுக்கு சொல்லும் வழி இது.

Tags

Next Story
ஆசிரியர்களுக்கு உதவியாக மொபைல் செயலி: வேலை சுமையை குறைக்க புதிய முயற்சி..!