வாழ்வில் நலம் பெற என்ன செய்யலாம்...!
சிறப்பு அலங்காரத்தில் தன்வந்திரி பெருமான்.
ஸ்ரீரங்கத்தில் தன்வந்திரிக்கு தனி சன்னிதி உள்ளது. இந்த தன்வந்திரி ஜெயந்தி, தீபாவளிக்கு முதல்நாள் கொண்டாடப்படுகிறது.
தீபாவளி அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பாக வரும் திரயோதசி அன்று தான் தன்வந்திரி ஜெயந்தி, ‘தன்திரயோதசி’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. நோய்கள் வராமலிருக்கவும், நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுள் கிடைக்கவும் தன்வந்திரி வழிபாடு அவசியம்.
தன்வந்திரி பகவான் படத்தை வீட்டில் வைத்து தினமும் இந்த சுலோகத்தை 16 முறைக்குக் குறையாமல் கூறினால் நல்ல பலன்கள் கிட்டும். தீபாவளி அன்று கங்கையும், லட்சுமியும் நம் இல்லம் நோக்கி வருகின்றனர். அன்று மட்டும் வெந்நீரில் கங்கையும், நல்லெண்ணெயில் திருமகளும் குடிகொண்டுள்ளனர். அன்று வீடுகளின் வாசலில் அதிகாலையிலும், மாலையிலும் தீபங்கள் ஏற்றி வணங்க மகாலட்சுமி அருள் வருவாள். சுபகாரியம் நடக்கும்; செல்வம் பெருகும். அன்று லட்சுமியை தாமரை மலர் கொண்டு வணங்க வேண்டும்.
மந்திரம்:
"ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்தே'.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu