1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை
நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை.
பொதுவாக ஆன்மீக விஷயங்களை பற்றி விவரிக்க தொடங்கினால், பல நுாறு ஆண்டுகளை கடந்தும் பேசிக்கொண்டே போகலாம். அந்த அளவு அதில் அவ்வளவு அற்புதங்கள் அடங்கி உள்ளன. குறிப்பாக ஆன்மீகத்தை புரிந்து கொள்வதை விட உணர்ந்து கொள்வதே சரியான முறை என ஆன்மீக பெரியவர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே இந்தியாவில் உள்ள பல ஆன்மீக அதிசயங்களை பற்றி நாம் நம் வாசகர்களுக்கு விளக்கி உள்ளோம். இப்போது முன்பு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து தற்போது தனி நாடாக உள்ள நேபாளத்தில் உள்ள ஒரு அதிசயத்தை பற்றி பார்க்கலாம்.
பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலையை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் .
நேபாள் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோயில். இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல்படுத்துக்கொண்டு இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால், கிட்டதட்ட 14 அடி நீளத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை எப்படி இவளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்று வரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.
7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது. இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும் இதற்கான அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் தினமும் நடந்த வண்ணமே உள்ளன. நீரில் மிதக்கும் இந்த விஷ்ணுவின் அருளை பெற பக்தர்கள் எப்போதும் இங்கு வந்த வண்ணமே உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu