Virinjipuram Temple-'வரதட்சணை வாங்கக்கூடாது..!' 1300 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட உத்தரவு..!

Virinjipuram Temple-வரதட்சணை வாங்கக்கூடாது..! 1300 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட உத்தரவு..!
X

virinjipuram temple-மார்கபந்தீஸ்வரர் கோயில் (கோப்பு படம்)

குழந்தை பாக்யம் தரும் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்று வாருங்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

Virinjipuram Temple

விரிஞ்சிபுரம் கோவில், வேலூர் கண்ணோட்டம்

வேலூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் விரிஞ்சிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள விரிஞ்சிபுரம் கோயில், ஸ்ரீ மார்க்கபந்தீஸ்வரர் கோயில் என்று பிரபலமாக அறியப்படுகிறது. பாலாற்றின் தென்கரையில் தமிழ்நாட்டின் மாநிலத்தில் அமைந்துள்ள இக்கோயில், அதன் சுவர்களில் உள்ள அழகிய கலைநயமிக்க கற்கள் மற்றும் அதன் அரண்மனையான திராவிட கட்டிடக்கலை சோழ வம்சத்தின் ஆட்சியாளர்களை பிரதிபலித்து நிற்கிறது.

Virinjipuram Temple

மூலவர் அல்லது கோயிலின் முதன்மைக் கடவுள் லிங்க வடிவில் உள்ள சிவபெருமான் ஆவார். இந்தியா முழுவதிலும் இருந்து யாத்ரீகர்கள் விரிஞ்சிபுரம் கோவிலுக்கு ஆண்டு முழுவதும் வருகை தந்தாலும், தீர்த்தவாரி, சிவராத்திரி மற்றும் நவராத்திரி ஆகிய மூன்று பத்து நாட்கள் கொண்டாட்டங்களின் போது, ​​கோயிலின் உயிர்ச்சக்தி அதன் உச்சத்தில் உள்ளது மற்றும் திருவிழாக்கள் ஒரு பார்வைக்கு ஒரு பார்வை. இக்கோயிலில் மரகதாம்பிகை, கணபதி மற்றும் விரிஞ்சன் எனப்படும் பிரம்மா உள்ளிட்ட பக்தர்களால் வழிபடப்படும் பிற தெய்வங்களும் குழந்தை வடிவில் உள்ளன.


வழித்துணை நாதர் கோயில் அல்லது மார்க்கபந்தீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 1300 வருடங்கள் பழமையான சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.

Virinjipuram Temple

விரிஞ்சிபுரத்தலத்தில் அமைந்துள்ள சிம்மக்குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதி அளிக்கப்படுகின்றது. தமிழகத்தின் எந்தவொரு சிம்மக்குளங்களிற்கும் இல்லாத சிறப்பை உடையது இத்திருத்தலச் சிம்மக்குளம்.

தமிழ்நாடு மாநிலம் வேலூர் மாவட்டத்தில் வேலூர் நகரத்திலிருந்து 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ள விரிஞ்சிபுரம் என்னும் ஊரில் இத் திருத்தலம் அமைந்துள்ளது.

இக்கோயில் ஆம்பூர், குடியாத்தம் பகுதிகளில் செல்லும் பேருந்துப் பயணத்தின் மூலம் சென்று சதுவாலை என்னும் இடத்திலிருந்து நடந்தோஅல்லது ஆட்டோவிலோ செல்லலாம்.

இங்குள்ள கோயில் 1300 வருடங்கள் பழமையானதாகும். இங்கு பிரதான தெய்வம் மார்க்கபந்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக வடகிழக்கு திசையில் சிறிது சாய்ந்த நிலையில் உள்ளது.

Virinjipuram Temple

புராண வரலாறு

பண்டைக் காலத்தில் விரிஞ்சிபுரம் வழித்துணை நாதர் ஆலயமானது ‘நைமி சாரண்யம்’ என்றழைக்கப் பெற்ற

முனிவர்கள் கூடும் புண்ணியத்தலமாக விளங்கியது. சிவபெருமான் கௌரியிடம் கறுப்பு நிறமாய் இருப்பதால் ‘ஹே சங்கரீ’ என அழைக்க விளையாட்டாகக் கேட்டார் எனவும் இதனால் கோபமுற்ற கௌரி பாலாற்றின் வடகரையில் பொற்பங்காட்டினுள் ஐந்து வேள்விக் குண்டங்களை அமைத்து அதன் நடுவே ஒற்றைக்காலில் நின்று தவமிருந்தார் என்பது வரலாறாகக் கூறப்படுகின்றது.

அத்தவத்தின்போது சிம்மகுளத்தில் நீராடி தனது கருமேனி நீங்கி பொன்மேனி கொண்ட மரகதவல்லியாக மார்க்கசகாயரின் இடப்பாகத்தில் இடம் கொண்டாள் என்பதும் வரலாறு.

இறைவன், இறைவியர்

இக்கோயிலில் உள்ள இறைவன் மார்க்கபந்தீஸ்வரர் ஆவார். இறைவி மரகதாம்பிகை ஆவார். மூலவரான மார்க்கபந்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக வடகிழக்கு திசையில் சிறிது சாய்ந்த நிலையில் காணப்படுகிறார். மேலும் இக்கோயிலில் விநாயகர், முருகனுடன் வள்ளி,தெய்வானை, தட்சணாமூர்த்தி , பைரவர் , விஷ்ணு துர்க்கை, சரஸ்வதி, பிரம்மா, 63 நாயன்மார்கள் ஆகியோரும் உள்ளனர்.

Virinjipuram Temple

பூஜைகள்

தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும். பிரதோஷம் வழிபாடு, சிவராத்திரி , வைகாசி விசாகம், சித்ரா பௌர்ணமி, தை அமாவாசை போன்ற நாட்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

நம்பிக்கைகள்

கோயிலின் உட்பிரகாரத்தில் தலமரமாக பனைமரம் உள்ளது. இது ஒரு அதிசய பனை மரமாக உள்ளது. அதாவது இந்த பனைமரத்தில் காய்க்கும் பனை காய்கள் கருப்பாகக் காய்க்கின்றன. மறு வருடம் காய்க்கும் பனை காய்கள் வெள்ளையாகக் காய்க்கின்றன. மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியக் கதிர்கள் விழுகின்றன.

Virinjipuram Temple

சிம்மக்குள நீராடல் – பிரம்மாவிற்குச் சாப விமோசனம் கிடைத்த கார்த்திகை மாதம் இறுதி ஞாயிறு மகளிர் ஈர ஆடையுடன் நீராடியபின் விரிஞ்சிபுரம் வழித்துணை நாதர் ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தில் உறங்குவர். அன்றிரவு உறங்குபவர்கள் கனவில் பூக்கள், பழங்கள், புத்தாடைகள் ஆகியவற்றினைத் தாங்கியபடி முதியவர் கனவில் காட்சி தந்தால் அப்பெண்கள் விரைவில் கருத்தரிக்கும் பாக்கியத்தினை அடைவர் என்பது தொன்நம்பிக்கை. இச்சிம்மக்குளத் தீர்த்தத்தின் பீஜாட்சர யந்திரம் ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டது.


நேரம் காட்டும் கல்

கோயிலின் உள்ளே தென்புறத்தில், “நேரம் காட்டும் கல்” இருக்கிறது. அர்த்த சந்திர வடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்

Virinjipuram Temple

கி. பி 15 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் விஜயநகரப் பேரரசு விரிஞ்சிபுரம் பகுதியினை ஆண்டு வந்தது. மணமகன் வீட்டில் இருப்பவர் மணமகள் வீட்டிற்குப் பொன்னை வரதட்சணையாக வழங்கும் முறை இருந்து வந்தது. இத்தகைய முறையில் மாற்றம் வேண்டும் என எண்ணிய மணமகன் வீட்டாரினால் விஜயநகரப் பேரரசிடம் முறையிடப்பெற்றது.

கி. பி. 1426 ஆம் ஆண்டுக் கல்வெட்டின்படி ‘பிராமணர்களில் கன்னடியர், தெலுங்கர், தமிழர், இலாலர் முதலானோர் திருமணம் செய்யுமிடத்து கன்னிகாதானம் ஆகச் செய்திட வேண்டும். அப்படிச் செய்யாமல் பொன் வாங்கி பெண் கொடுப்பது, பொன் கொடுத்து திருமணம் செய்வது அரசத் துரோகம் ஆகும். மீறுவோர் சாதியிலிருந்து, சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவர்.’ என விஜய நகரப் பேரரசினால் உத்தரவிடப்பட்டது என்பது அக்கல்வெட்டில் உள்ள தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!