Vijayapathi Temple-'பித்ரு தோஷம்' நீக்கும் ஸ்ரீ விசுவாமித்திர மகாலிங்கசுவாமி கோவில்..!

Vijayapathi Temple-பித்ரு தோஷம் நீக்கும் ஸ்ரீ விசுவாமித்திர மகாலிங்கசுவாமி கோவில்..!
X

Vijayapathi Temple-விஜயாபதி விசுவாமித்திர மகாலிங்க சுவாமி கோவில்.(கோப்பு படம்)

எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ என்னை இப்படி பாடாய்படுத்துகிறது என்ற புலம்பலுக்கு பித்ரு தோஷம் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

Vijayapathi Temple

பித்ரு தோஷம், பித்ரு சாபம் என்றால் என்ன? அதை தீர்ப்பது எப்படி? அதற்கான பரிகாரம் என்ன போன்றவற்றை இந்த கட்டுரையில் காண்போம் வாங்க.

ஒருவருடைய ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 3, 5, 9 ஆம் இடங்களில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால் அவருக்கு கட்டாயம் பித்ரு தோஷம், பித்ரு சாபம் இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. ராகு இருந்தால் அப்பா வழி முன்னோர்களால் பித்ரு சாபம். கேது இருந்தால் அம்மா வழி முன்னோர்களால் பித்ரு சாபம் இருக்கிறது என்பதையம் குறிக்கிறது.

ஒவ்வொரு தலைமுறையிலும் தற்கொலைகளும், கொலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு தலைமுறையில் இயற்கையான மரணத்தை அடையாதவர்களின் ஆத்மா, மறுபிறவி அடையாமல் இந்த பூலோகத்திலேயே திரிந்து அலைந்துகொண்டிருக்கும். அந்த ஆத்மாவானது நான்காம், ஐந்தாம் தலைமுறையினரைப் பிடிக்கும். அதாவது நான்கு தலைமுறைக்கு முன்னால் நடந்த அகால மரணத்திற்கான சாபத்தை, அனுபவிக்கப் போவது நான்கு தலைமுறை தள்ளியிருக்கும் சந்ததியினரே.


அதாவது பாட்டன்,பூட்டன் சொத்தோடு சேர்த்து, அந்தப் பாவங்களையும் சுமக்கப் போவது நான்காவது தலைமுறை தான். உதாரணத்திற்கு, என் அப்பாவுடைய தாத்தாவின் சகோதரனுக்கு அவருடைய ஜாதகப்படி 80 வயது வரை வாழ வேண்டும் என்ற ஜாதக அமைப்பு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

ஆனால், அந்த நபர் தனது 20 வயதிலேயே தற்கொலை செய்துகொண்டோ அல்லது கொலைசெய்யப்பட்டோ உயிரை இழந்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். இப்படியாக குறைந்த வயதில் தன்னுடைய உயிரை இழந்த, அந்த நபர், எந்த இடத்தில் இறந்தாரோ, அவர் வாழவேண்டிய தன்னுடைய 80 வயதுவரை ஆவியாக அதே இடத்தில்தான் அலைந்துகொண்டிருப்பார். அவருடைய ஆயுள் எப்போது முழுமையாக முடிகிறதோ அப்போது தான் அவரால் எமலோகத்திற்குச் செல்ல முடியும்.

Vijayapathi Temple

அவர் இறந்த நாளிலிருந்து தனது 80 வயது வரை எந்த ஒரு நல்லது, கெட்டதையும் அனுபவிக்காமல் ஆவியாக சுற்றித்திரிந்ததால், அவர் எமலோகத்திலும் ஒதுக்கப்பட்டவராகத்தான் இருப்பார். இப்படிப்பட்ட சம்பவமானது ஒருவருடைய பரம்பரையில் நான்கு நபரையோ, ஐந்து நபரையோ தாண்டினால் அது நான்காம் தலை முறைக்கோ, ஐந்தாம் தலைமுறைக்கோ பித்ரு தோஷமாக வந்துவிடுகிறது என்று நம்முடைய பழமையான நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

இப்படியாக ஒருவருக்கு அப்பா வழியில் பித்ருதோஷம் இருக்கிறது என்றால் அப்பா உடன் பிறந்தவர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் பித்ரு தோஷம் இருக்கும் என்பதே உண்மை. இந்த தோஷமானது நீங்கள் எவ்வளவுதான் நல்ல காரியத்தில் ஈடுபட்டாலும் அதற்கான பலனை உங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கவே சேர்க்காது.


விஜயாபதி ஸ்ரீ விசுவாமித்திர மகாலிங்க சுவாமி கோவில்

இந்த பித்ரு தோஷத்தை நீக்குவதற்கு ஒரே இடம் விஜயாபதி ஸ்ரீ விசுவாமித்திர மகாலிங்க சுவாமி கோவில் தான்.

நெல்லை மாவட்டத்தில், ராமநாதபுரம் அருகில் இருக்கும் ‘விஜயாபதி’ என்கின்ற கடலோர கிராமத்தில் ‘ஸ்ரீ விசுவாமித்திர மகாலிங்க சுவாமி’ திருக்கோவில் உள்ளது. அந்த கோவிலில் பித்ரு தோஷம் உள்ளவர்கள் ‘நவகலசயாகம்’ செய்ய வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த கோவிலுக்குச் சென்று இந்த நவ கலச யாகத்தை குடும்பத்தோடு செய்தால், 100 நாட்களுக்குள் உங்கள் குடும்பத்திற்கு இருக்கும் நீண்டகால தோஷமான பித்ரு தோஷம் நீங்கும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

Vijayapathi Temple


இப்படியாக இந்த யாகத்தை செய்துவிட்டு வந்தாலும், அதன்பின்னர் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் உங்களது வீட்டின் அருகில் இருக்கும் பழமையான சிவாலயங்களுக்கு சென்று, 9 ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவேண்டும்.

இப்படி 12 அமாவாசை அன்றும் தொடர்ந்து எலிகளுக்கு அன்னதானம் செய்து வந்தால் உங்களுக்கு இருக்கும் பித்ரு தோஷம் நீங்கி, உங்களுடைய வாழ்க்கை வளமாக மாறும் என்பது நம்பிக்கைக்குரிய ஒன்று. பித்ரு தோஷ பிரச்னையை எதிர் கொள்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

நவக்கலச பூஜை எப்படி நடத்தப்படுகிறது என பார்க்கலாம்

நவக்கலச பூஜை செய்யும் முன்பு, நாம் காலையில் நீராடி சுத்தமான உடைகளை உடுத்தி வரவேண்டும். வாய்ப்புள்ளவர்கள் தங்கள் வீட்டில் இருந்து வெண்பொங்கலோ, இல்ல சர்க்கரை பொங்கலோ செய்து இங்கே இருக்கும் நாகர்களின் பீடத்தில் தங்களுடைய முன்னோர்களின் ஆன்ம விடுதலைக்கும், தங்களுடைய நவக்கிரக துன்பங்கள் தீரவும் முன்னோர்களையும், குல தெய்வங்களையும், விஸ்வாமித்திர மகரிஷியையும், இங்கிருக்கும் இறைவனையும், தாயாரையும் பிரார்த்தனை செய்து..., அவற்றை ஒரு இலையில் வைத்து காகங்களுக்கு படைக்கலாம்.


Vijayapathi Temple

நவக்கலச பூஜை செய்ய வருபவர்கள் இங்குள்ள விஸ்வாமித்திரர் சன்னதியிலும் ரோஜா மற்றும் மல்லிகை மாலைகள் கொண்டும், பழங்கள், இனிப்புகள் எல்லாம் தட்டில் வைத்து வழிப்பட்டு தங்கள் பெயருக்கு அர்ச்சனையும் செய்கின்றார்கள். இங்கே ஒரு தனி அறை இருக்கிறது. அதை பூட்டியே வைத்து உள்ளனர். குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் அதை திறந்து பூஜை செய்வார்களாம். இங்க விஸ்வாமித்திர மகரிஷி அரூபமாக தவம் செய்து கொண்டு இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.

நவக்கலச அபிஷேகம் முடிந்தவுடன் அதே ஈரத் துணியுடன் ஒரு பர்லாங்கு தொலைவில் உள்ள கடலுக்கு சென்று அங்கே விஸ்வமித்திரர் தீர்த்த கட்டம் என்ற இடம் சென்று கடலில் குளிக்கவேண்டும். பின்னர், கடற்கரை மணலில் நெற்றி கடல் மண்ணில் படுமாறு இடது பக்கம் மூன்று முறையும் ,வலது பக்கம் மூன்று முறையும் (மனதுக்குள் சிவ மந்திரம் கூறியவாறு ) உருள வேண்டும்.

அதன் பிறகு ,மீண்டும் கடலில் சென்று மூன்று முறை மூழ்கி எழவேண்டும். இப்படியாக மூன்று முறை செய்ய வேண்டும். இப்படிச் செய்த பின்னர், கோவில் பூசாரி ஒரு எலுமிச்சை பழத்தினால் நம்மை திருஷ்டி சுற்றிவிட்டு, அந்த எலுமிச்சையை கடலுக்குள் எறிந்துவிடுவார். நாம் அணிந்திருந்த ஆடையை கழற்றி,வேறு ஆடை அணிந்துவிட்டு, ஏற்கனவே அணிந்திருந்த ஆடையை கடலில் எறிந்துவிடவேண்டும்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!