Varahi Mantra in Tamil-மனபயம் நீக்கும் வாராகி மந்திரம்..!

Varahi Mantra in Tamil-மனபயம் நீக்கும் வாராகி  மந்திரம்..!
X

varahi mantra in tamil-வாராகி அம்மன் (கோப்பு படம்)

மனதில் ஏற்படும் அச்சத்தை நீக்கி தைரியத்தை வளர்த்து ஒரு நம்பிக்கையுள்ள மனிதராக மாற்றும் சக்தி இந்த வாராகி மந்திரத்துக்கு உண்டு.

Varahi Mantra in Tamil

ஒரு மனிதனுக்கு எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் அதனை ஏதாவது ஒரு வகையில் அவன் சமாளித்துக் கொள்வான். ஆனால் சில சமயங்களில் தான் செய்யாத தவறுக்கு, மற்றவர்களிடம் அவமானப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதை எவராலும் தாங்கிக்கொள்ளமுடியாது.

நான் செய்யாத தவறுக்கு தண்டனையை அனுபவிப்பது என்பது மிகவும் கொடுமையான ஒன்று. இதை அனுபவரீதியாக அனுபவித்தவர்களுக்கு புரியும். இப்படி நாம் செய்யாத ஒரு தவறுக்கான பழி நம்மேல் விழும்போது, அதிலிருந்து நாம் எப்படி வெளிவருவது என்ற அச்சம் நமக்குள் வந்துவிடும். அந்த அச்சமே பல சிக்கல்களைக் கொண்டுவரும்.

Varahi Mantra in Tamil

இப்படியான இக்கட்டான சூழல் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் நிச்சயம் வந்திருக்கும். அந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு சமாளிப்பதற்கும் மனதில் இருக்கும் பயத்தினை நீக்குவதற்குமான ஒரு சிறந்த வழிபாடு தான் இந்த வாராகி வழிபாடு. இந்த மூல மந்திரத்தை உச்சரிக்கும் போது நம்மை அறியாமலேயே நம் மனதிலுள்ள அச்சமெல்லாம் நீங்கிவிடும். உங்களுக்காக வாராகி அம்மனின் மூல மந்திரம் கீழே தரப்பட்டுள்ளது.


வாராகி அம்மன் தோற்றம்

வாராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும்.

இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் என வாராகியினைப்பற்றி ஸ்ரீ தத்துவநிதி விபரிக்கின்றது. தண்டநாத வராகி, சுவப்ன வராகி, சுத்த வராகி என்னும் மேலும் மூன்று வகையான வாராகியின் உருவ அமைப்பு பற்றியும் இந்நூலில் கூறப்படுகின்றது.

Varahi Mantra in Tamil

தண்டநாத வாராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுவப்ன வாராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுத்த வாராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.

Varahi Mantra in Tamil

வாராகி அம்மன் வழிபாடு

நம்முடைய வாழ்க்கையில் பல கஷ்டங்கள் நாம் செய்யும் செயல்களாலே ஏற்படுகிறது. இதனால் பல எதிரிகளின் தொல்லையினால் சிரமப்படுவார்கள். எதிரியின் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள் வராகி அம்மனை வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எதிரிகளை அழிப்பதற்கு வாராகி அம்மன் ருத்ர அவதாரம் எடுப்பாள். எதிரியின் தொல்லை நீங்குவதற்கு வராஹி அம்மனின் மூல மந்திரத்தை 26 நாட்கள் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வராகி அம்மனுடைய மொத்த அருளும் உங்களுக்கு கிடைக்கும்.

Varahi Mantra in Tamil

பூஜை அறை வழிபாட்டு முறை

வாராகி அம்மனை வழிபடுபவர்கள் வெள்ளை மொச்சை பருப்பை நன்றாக வேக வைத்து அதனுடன் தேன் மற்றும் நெய் கலந்து நைவேத்தியமாக படைத்து வாராகி அம்மனை வழிபாடு செய்து வர வேண்டும்.

இந்த வழிபாட்டினை தினமும் செய்து வந்தால் எதிரிகளின் தொல்லை நீங்கும். அதோடு தன வசியம் பெருகும். தொழில் விருத்தி அடைந்து நல்ல செழிப்பாக இருக்கும்.

இதோ வாராகி மந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் ||

நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி ||

அந்தே அந்தினி நமஹ|

ருந்தே ருந்தினி நமஹ|

ஜம்பே ஜம்பினி நமஹ|

மோஹே மோஹினி நமஹ|

ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ|

சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம் சர்வ வாக்சித்த சக்ஷூர் முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம் ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட் ||

Varahi Mantra in Tamil

தினம் தோறும் நம் மனதில் அந்த வாராகி அம்மனை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பயந்த சுபாவமானது மறைந்து, நம்மை அறியாமலேயே நம் மனதிற்குள் தன்னம்பிக்கையும், தைரியமும் வளர்ந்துவரும். அஷ்டமி திதியன்று நெய்தீபம் ஏற்றி வாராஹி அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. வாராகி அம்மனுக்கு மாதுளம்பழம் நைவேத்தியமாக படைப்பது மிகவும் சிறப்பு.

Tags

Next Story