உலகெங்கும் இருந்த சிவ வழிபாடு..! ஆச்சர்ய பண்பாடு..!

உலகெங்கும் இருந்த சிவ வழிபாடு..! ஆச்சர்ய பண்பாடு..!
X

மெக்ஸிகோ நாட்டில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட சிவாலயம்.

நம் பண்பாட்டில் ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இல்லாத ஒன்றை இருப்பதாக கூறுவது நமது முன்னோர்களின் மரபும் அல்ல. அது அவர்களின் இயல்பும் அல்ல. ஆங்கிலத்தில் சூரியனை sun என்ற வார்த்தையில் குறிப்பிடுவது தெரியும். இந்த sun என்ற வார்த்தை சிவன் என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்ததே ஆகும். ஆதிகால கிரேக்கர்கள் சீயஸ் என்னும் கடவுளை வழிபட்டதாக வரலாற்று குறிப்புகளில் படித்து இருக்கலாம்.

அந்த சியஸ் கடவுளும் சிவனின் திரிபு அம்சமே ஆகும். பாபிலோன் நாட்டில் அதாவது இன்றைய ஈராக்கில் களிமண் ஓடுகளில் எழுதி வைக்கப்பட்டுள்ள ஆதிகால பட்டயங்கள் சில பூமிக்கு அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அந்த பட்டயங்களில் சிவன் என்ற பெயர் எழுதி வைக்கபட்டிருக்கிறது. பாபிலோன் நாட்டில் அன்றைய காலத்தில் சிவன் என்ற பெயரில் ஒரு பெரிய நகரமே இருந்திருக்கிறது.

வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடையே மத்திய பிரதேசமாக திகழும் மெக்சிகோ, பெரு ஆகிய நாடுகளில் பெரிய சிவன் கோயில்கள் இருந்திருக்கின்றன. இன்றும் காலச் சூழலால் கவனிப்பாரற்ற நிலையால் சிதைந்து அவைகள் காணப்பட்டாலும், சிவவழிபாடு உலகம் தழுவிய வழிபாடு என்பதற்கு ஆதாரமாக திகழும் அந்த கோயில்கள் சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்டதாக ஒரு சாராரும் 10,000 ஆண்டுகள் இருக்கும் என்று ஒரு சாராரும் கணக்கிட்டு சொல்கிறார்கள்.

இந்த சிவாலயங்கள் 1937-ல் கண்டுபிடிக்கப்பட்டு இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதை பற்றிய விளக்கங்களையும் விரிவான நுணுக்கங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி நமது கலாசாரத்தின் பெருமையையும், தொன்மையையும் மக்கள் அறிந்து பெருமிதம் கொள்ள செய்யாமல் இருப்பது நமது மதச்சார்பற்ற அரசுகளின் அலங்கோல ஆட்சி முறைகளே ஆகும்.

சுய-கௌரவம் இல்லாத மனிதன் எவனும் வாழ்க்கை சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற முடியாது அப்படிப்பட்ட மக்கள் நிறைந்த எந்த நாடும் முன்னேறி விட முடியாது. நமது கலாசாரம் இன்றைக்கு 10,000 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் வேர் ஊன்றி இருந்ததற்கான ஆதாரங்கள் பல உள்ளது. அவற்றில் இந்த சிவாலயங்களும் கிரீஸ் தீவில் கண்டெடுக்கப்பட்ட சங்கு, வாத்தியம் போன்ற முத்திரைகளும் இங்கிலாந்து நாட்டில் சிவன் அதே பெயரிலேயே காக்கும் கடவுளாக வணங்கப்பட்டு வருவதையும் குறிப்பிடலாம்.

சிரியா நாட்டில் ஆதிகால மக்கள் ரிஷிப வாகனத்தில் மான், மழு ஏந்திய தெய்வத்தை வழிபட்டதற்கான சித்திர ஆதாரங்களும், மலேயா, போர்னியா, பாலித்தீவுகள் போன்ற நாடுகளில் சிவவழிபாடு அனாதிகாலம் தொட்டே மக்களின் வாழ்க்கையில் பின்னி பிணைந்திருந்ததற்கான ஆதாரங்கள் பல நமக்கு கிடைத்திருக்கின்றது.

அது மட்டுமல்ல உலகில் ஆதிகாலத்தில் சூரியனையே பெருவாரியான மக்கள் வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். சிவன் என்ற வார்த்தைக்கே செம்மை, வெம்மை என்று தான் பொருள். ஞாயிறு அல்லது சிவப்புநிறமான ஜோதியே சிவபெருமானின் தோற்றமாக வேதங்களிலும் தமிழ் மறைகளிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

‘ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதி விரிசுடராய் நின்ற மெய்யன் பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்து பரந்ததோர் படர்ஒளி பரப்பே ஜோதியாய் தோன்றும் திருவே ஜோதியே சுடரே சூழொளி விளக்கே”

- என்றெல்லாம் வரும் திருவாசகப்பாடலும் சிவ பெருமான் ஜோதி வடிவம் சூரியனின் சொரூபம் என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லுகிறது. இதை ஆதாரமாகக் கொண்டு நாம் சூரிய வழிபாடு எங்கெல்லாம் உள்ளதோ அவையெல்லாம் சிவ வழிபாடே என்று வாதம் புரிந்தாலும் அது தவறல்ல. அது அறிவுக்கு ஒவ்வாத விஷயமும் அல்ல. பழைய பாபிலோன் நகரில் சிவவழிபாடு ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்திருக்கிறது. அதன் அடையாளமாக சிவலிங்கங்கள் பல அங்கு இன்னமும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அயர்லாந்திலும், ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் கண்டெடுக்கபட்டுள்ள பல சிவலிங்கங்கள் சிவ வழிபாட்டின் முழு வீச்சை நமக்கு காட்டுகின்றன.

உலகம் முழுவதையுமே அரசாண்ட இங்கிலாந்து நாடு ஒரு காலத்தில் ரோமாபுரி நாட்டிற்கு அடிமைபட்டு கிடந்ததை வரலாற்று மாணவன் கூட அறிவான். அப்போது ரோமர்கள் இங்கிலாந்து தேச முழுவதும் லிங்க வழிபாட்டை பரப்பினார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. கடந்த 14-ம் நூற்றாண்டு வரையில் லித்வேனியா நாட்டில் சிவ வழிபாடு இருந்திருக்கிறது. அதுமட்டுமல்ல திபெத், பூட்டான் போன்ற நமது அண்டை நாடுகளிலும் ஜப்பானியரின் அரச மதமான ஹிண்டோ மதத்திலும் லிங்க வழிபாடு இன்றும் இருக்கிறது. இது மட்டும் அல்ல இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்காவிலுள்ள காபாக்குள் சிவலிங்கமே இருக்கிறது. அதை தொட்டு முத்த மிடுவதே ஹஜ் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். தென் அமெரிக்கா, வட ஆமெரிக்காவில் பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் மட்டுமல்ல, நமது நாட்டிலும் தொல்பழங்காலத்தில் லிங்க வழிபாடு மட்டுமே இருந்திருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் ஹராப்பா, மொகஞ்சதாரோ போன்ற பகுதிகளில் கிடைத்து இருக்கிறது. மனிதர்களும் பல விதமான விலங்குகளும் சூழ்ந்திருக்க யோக நிஷ்டையில் சிவ பெருமான் வீற்றிருக்கும் யோகத்திருக்கோலம் அப்பகுதிகளில் கிடைத்திருப்பது இதை நமக்கு காட்டுகிறது.

எனவே தென்னாடுடைய சிவன் எந்நாட்டவருக்கும் இறைவனாக இருந்திருப்பதும் இருப்பதும் வெறும் கற்பனை அல்ல முழுமையான நிஜமாகும். இந்த நிஜங்கள் நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்களும் அதற்கு பின்பு நம்மை ஆளுகின்றவர்களும் இதை மறைத்து விட்டார்கள். இன்றும் மறைப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்

இத்தகையவர்களிடமிருந்து நமது கலாசார வரலாற்றுப் பின்னணியை காப்பாற்ற நாம் தான் விழிப்புடன் இருந்து பாடுபட வேண்டும். நமது சுயத்தன்மையை இழந்தோம் என்றால் முகமற்ற மனிதர்களாக முகவரியில்லாத கடிதங்களாக வருங்காலத்தில் நமது வாரிசுகள் அல்லாட வேண்டியது இருக்கும். பண்பாடு இல்லாத காட்டுமிராண்டி வாழ்க்கையையும் நடத்த வேண்டி இருக்கும்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி